Published:Updated:

ஊரடங்கால் 26 பேருடன் நடந்த அமைச்சரின் மகன் திருமணம் - போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்

அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம்
அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமினின் மகன் திருமணம் 26 பேருடன் சென்னையில் நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம், இறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்புகளில் சொற்ப எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

பட்டுவேட்டியுடன் அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டர். திருமணத்தையொட்டி திருவேற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியாற்றும் பணியாளர்களுக்கு மணமக்கள், வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கினர்.
திருமணம்
திருமணம்
Vikatan

கொரோனா வைரஸ் பாதிப்பு வருவதற்கு முன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஒரு தரப்பினர் தள்ளி வைத்துவிட்டனர். இன்னும் சிலர் சமூக விலகல், மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் திருமணங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர் பெஞ்சமினின் மகன் திருமணம் வீட்டிலேயே எளிமையாக நடந்துள்ளது.

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமினின் இளைய மகன் சாம்சன் பால். இவருக்கும் ஸ்ரீசாத்திகாவுக்கும் திருமணம் கடந்த 3 மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை மணமகள், மணமகன் வீட்டினர் தடபுடலாகச் செய்துவந்தனர். அமைச்சர் பெஞ்சமின் குடும்பத்தினருடன் சென்று முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். முதல்வரைத் தொடர்ந்து துணை முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்களுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஏனெனில், அமைச்சர் பெஞ்சமின் தரப்பு இந்தத் திருமணத்தை சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தது.

திருமணம்
திருமணம்
`மலேசியா பயணம்; தனிமைப்படுத்தல்!’ - சென்னை மருத்துவ மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அயனம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் வீட்டில் இன்று திருமணம் நடந்தது. இதில் மணமகன் வீட்டினர் 14 பேரும் மணமகள் வீட்டினர் 12 பேர் என மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றினர். அமைச்சர் பெஞ்சமின் இல்லத் திருமணத்தை கிறிஸ்துவ போதகர் நடத்தி வைத்தார். பட்டுவேட்டியுடன் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டர். திருமணத்தையொட்டி திருவேற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியாற்றும் பணியாளர்களுக்கு மணமக்கள், வேட்டி சேலை மற்றும் இனிப்பு வழங்கினர். மணமக்களுக்கு முதல்வர் உட்பட அமைச்சர்கள் கட்சியினர் போனில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு