ஒரு காலத்தில் சினிமா, விளையாட்டு உள்ளிட்டவைதான் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த லிஸ்ட்டில் அரசியலும் சேர்ந்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் உளறிக் கொட்டி, மக்களை குஷிப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதில் ‘தி பெஸ்ட் என்டர்டெய்னர்’ விருது வழங்கினால், அதைத் தட்டிச்செல்பவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனாகத்தான் இருப்பார். அவர் பொதுமேடையில் உளறியவற்றின் தொகுப்பு இதோ...

* ``தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்திருக்கிறார்.’’

* ``பொங்கல் பரிசுக்குக் கொடுக்கப்படும் பணம் மீண்டும் நமக்குத்தான் வரும். டாஸ்மாக் கடை மூலம் அரசுக்கே பொங்கல் பரிசுப் பணம் வந்துவிடும்.’’

* “தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக சென்றுகொண்டிருக்கிறது என்று பாருங்கள்; கொஞ்சம் சிந்தியுங்கள்.’’

* `பொங்கல் பரிசுத் திட்டத்தை முதல்வர் அறிவிச்சதுக்கு திட்றாங்க... தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஸ்டாலினுடைய அப்பா செய்தால் அவர்கள் புத்தரின் வாரிசு, இயேசுவின் வாரிசு. ஆனால் அதே திட்டங்களை நாம் செய்தால் இயேசுநாதரைச் சுட்ட கோட்சேவின் வாரிசு என்ற மாதிரி... எதைச் செய்தாலும் தப்பு தப்பு என்கிறார்கள்.”

* ``காங்கிரஸ் ஆட்சியின்போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்தது. அப்போது பிரதமராக இருந்தவர் முலாயம் சிங்.”