Published:Updated:

`ஐயா நல்லா இருக்கணும், ஆசீர்வாதம் பண்ணு!'- பூம்பூம் மாட்டிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார்

`பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன்.''

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கள், வீடியோக்களுக்கு எப்போதும் இணையத்தில் மவுசு உண்டு. அதற்கேற்றாற்போலவே அவரது பேட்டிகளும் அமையும். ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு பேட்டி அவரிடமிருந்து வந்துவிடும். இதற்கிடையே, ஃபேஸ்புக்கில் ஆக்டிவாகச் செயல்பட்டு வரும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இன்று காலை வாக்கிங் செல்லும்போது அவரது வீட்டுக்கு வெளியே, பூம்பூம் மாட்டிடம் அவர் ஆசி வாங்கும் வீடியோதான் அது. அந்த வீடியோவைப் பதிவிட்டு கூடவே, ``பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இன்றோ, நமது பண்பாட்டுக் கூறுகளை, பாரம்பர்ய அம்சங்களைக் கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும் பூம்பூம் மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோண்டி எடுத்து கீழடி நாகரிகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், நாம் இத்தகைய பூம்பூம் மாட்டுக்காரன் போன்றவர்களை மறந்து விடக்கூடாது. இவர்களைக் காப்பதும் ஒன்றுதான், நமது நாகரிகத்தைக் காப்பதும் ஒன்றுதான்" என்று பதிவிட்டுள்ளார்.

கூடவே அந்த வீடியோவில் ```ஐயா நல்லா இருக்கணும், ஆசீர்வாதம் பண்ணு!'' என பூம் பூம் மாட்டுக்காரர் மாட்டிடம் சொல்ல பின்பு மாட்டிடம் அமைச்சர் ஜெயக்குமார் ஆசி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

'
` நடிகர் விஜய் ஏன் எங்களைத் தாக்கிப் பேசினார்?!' - அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த விளக்கம்