Published:Updated:

`முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்!' -விகடன் நிருபர்கள் மீதான வழக்கு குறித்து கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

கருத்து கேட்பது செய்தியாளரின் முழு உரிமை. ஜூ.வி இதழின் செய்தியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் காரணம் குறித்து ஆராய்ந்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கயத்தார், விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தன் சொந்த ஊரான சிதம்பராபுரத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

அவரிடம், ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலையை அவதூறு செய்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ``இதுபோன்ற சம்பவங்களை ஏதாவது ஒன்றிரண்டு இடங்களில் சில விஷமிகள் செய்திருக்கலாம். தலைவர்கள் சிலைக்கு மட்டுமல்ல, தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு தமிழகத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அகதிகளிடம் ஜூனியர் விகடன் கருத்துக் கேட்பு... விகடன் நிருபர்கள் மீது வழக்கு!

அந்தக் காரணத்தினால்தான் ஸ்டாலின் நினைத்த இடங்களுக்கெல்லாம் செல்கிறார். நினைத்ததையெல்லாம் பேசுகின்றார். தினமும் நடைப்பயிற்சி செய்கின்றார். முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் துணை முதல்வராக இருந்தபோது மதுரைக்கே வர பயந்தவர்தான் ஸ்டாலின். தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் அவருக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லை என்பது அவரின் கருத்துதானே தவிர, மக்களின் கருத்து அல்ல.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

நிர்வாகத் திறனில், தமிழக அரசு ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது. அதேபோல, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்கூட தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது. உணவு தானிய உற்பத்தியிலும் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதுபோன்று பல துறைகளிலும் மத்திய அரசின் விருதுகளைத் தமிழக அரசு பெற்றுள்ளது என்பதை ஸ்டாலின் அறிவார்.

`விகடன் நிருபர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெறுங்கள்!‍' -கொந்தளிக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசியல் காரணங்களுக்காக அவர் ஏதாவது குறைகளைக் கூறுவார். சட்டமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும்படி வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், தேர்தல் தேதியை அறிவித்தால், நீதிமன்றத்துக்குச் சென்று தடைகோரி வழக்கு தொடருவார்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

இதுதான் தி.மு.க-வினரின் வேலை. ஸ்டாலினைப் பொறுத்தவரையில் முதல்வர் நாற்காலியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற பதவி வெறியில் இருக்கிறாரே தவிர, மக்கள் நலனில் அவருக்கோ அவரது கட்சிக்கோ எவ்வித அக்கறையும் இல்லை. ஜனநாயகரீதியாக யார் போராடினாலும் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் அரசு வழங்கி வருகிறது.

`வன்முறை இருமுனை கத்தி... அது நம்மையே தாக்கும்!' - பிரசாரக் கூட்டத்தில் கொதித்த கடம்பூர் ராஜு

ஒரு சட்டத்தை எதிர்த்துக் கோலம் போட்டதால்தான் சென்னையில் கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். மார்கழி மாதம் வீட்டின் முன்பு கோலம் போடுவதற்கு அனுமதி பெறச் சொல்லவில்லை. ஆனால், எதிர்ப்புக் கருத்தை தெரிவிக்கும்விதமாகவும், முத்திரையைப் பதிக்கும்விதமாகவும் கோலம் போடுவது தவறு. அது சட்டம் ஒழுங்கினைப் பாதிக்கும் செயலாகவே கருதப்படும்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

மக்களிடம் கருத்து கேட்பதற்குப் பத்திரிகையாளர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் காரணம் குறித்து ஆராய்ந்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு