Published:Updated:

`கூட்டல் கணக்குகூட தெரியாத ஸ்டாலின் அவதூறு கிளப்புகிறார்’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

`கொரோனா காலத்தில் திரையரங்குகளை எப்படித் திறக்க முடியும்... திரையரங்குகளில் நான் பேரம் பேசியதாகக் கூறும் ஸ்டாலின், அதை நிரூபிக்கத் தயாரா?'' என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார்.

`கூட்டல் கணக்குகூட தெரியாத ஸ்டாலின் அவதூறு கிளப்புகிறார்’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

`கொரோனா காலத்தில் திரையரங்குகளை எப்படித் திறக்க முடியும்... திரையரங்குகளில் நான் பேரம் பேசியதாகக் கூறும் ஸ்டாலின், அதை நிரூபிக்கத் தயாரா?'' என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார்.

Published:Updated:
கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், கோவில்பட்டி மற்றும் நட்டாத்தி ஆகிய இரண்டு இடங்களில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏவும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூவை விமர்சித்தும், கேள்வி எழுப்பியும் பேசினார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா கோவில்பட்டியில் இன்று கொண்டாடப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த விழாவில், நாராயணசாமியின் உருவப்படத்துக்கு அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடிக்கிடந்தபோது நான் பேரம் பேசியதாகக் கூறியிருக்கிறார். கொரோனா காலத்தில் திரையரங்குகளை எப்படித் திறக்க முடியும்... திரையரங்குகளில் நான் பேரம் பேசியதாகக் கூறும் ஸ்டாலின், அதை நிரூபிக்கத் தயாரா? திரைத்துரையினரைச் சீரழித்தவர்கள் தி.மு.க-வினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க ஆட்சிகாலத்தில் திரைப்படங்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை இருந்தது. தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் `ரெட்ஜெயன்ட்’ மூலமாக மட்டும்தான் திரைப்படங்களை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலை அப்படி இல்லை. குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள்கூட, எளிதில் படத்தை திரையிடக்கூடிய வெளிப்படைத்தன்மை திரைத்துறைக்கு வந்திருக்கிறது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

குறைந்த செலவில் படம் தயாரிப்பவர்களுக்கு மானியத் தொகையை ரூ.7 லட்சமாக உயர்த்தியதும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை வரைமுறைப்படுத்தியதுயும் அ.தி.மு.க அரசுதான். `சராசரி அறிவு இல்லாத அமைச்சர்’ என்று என்னைப் பற்றி ஸ்டாலின் நேற்று பேசியிருக்கிறார். `பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்ட ரூ.2,500 ரூபாயுடன் 1,500 ரூபாயும் சேர்ந்து 5,000 ரூபாயாக வழங்க வேண்டும்’ எனக் கூட்டல் கணக்கு தெரியாமல் பேசியவர்தான் ஸ்டாலின். கோவில்பட்டி இரண்டாவது கூட்டுக் குடிநீர்திட்டத்தைப் பற்றி தவறான தகவல்களைக் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னிடம் போதிய ஆதாரம் இருக்கிறது. சுதந்திர தினத்தை, குடியரசு தினம் என மாற்றிச் சொல்லக்கூடியவர்தான் அவர். கோவில்பட்டி தொதிக்கு எம்.எல்.ஏ-வாக நான் என்ன செய்தேன் எனக் கேட்கும் ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோவில்பட்டி தொகுதியில் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தினார்கள் எனச் சொல்ல முடியுமா?

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

மக்களுக்குத் தவறான தகவல் கூறியதற்காகவும், என்னை அவதூறாகப் பேசியதற்காகவும், முதல்வரின் அனுமதியுடன் ஸ்டாலின் மீது வழக்கு தொடர தயராக இருக்கிறேன். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்தான் சொத்துக்குவிப்பு வழக்குகளில் தற்போது நீதிமன்றம் சென்றுவருகின்றனர். வரும் தேர்லுக்குப் பின்னர் சிறைக்குச் செல்ல போகிறவர்கள் தி.மு.க-வினர்தான். தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தி.மு.க., மக்களை ஏமாற்றுகிறது. `இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும்’ என்று சொன்ன தி.மு.க அதை வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மக்கள் ஏமாளிகள் இல்லை என்பதைத் தேர்தல் முடிவு காட்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism