Election bannerElection banner
Published:Updated:

`அடுத்த அ.தி.மு.க ஆட்சியில் பல வழக்குகள் தூசு தட்டப்படும்; ஸ்டாலின் சிறை செல்வார்!’- கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

``வரும் தேர்தலுக்குப் பிறகு, அடுத்த அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் உள்ளிட்ட பல கொலை வழக்குகள் தூசு தட்டி விசாரிக்கப்படும். அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிறைக்குச் செல்வார்” என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலைய சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ், மாவட்ட வேளாண்மை இணை இயக்கநர் அலுவலக வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,``ஊழலின் ஊற்றுக் கண்ணானதி.மு.க., அ.தி.மு.க மீது குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனே வியந்துபோய் விஞ்ஞானரீதியில் தி.மு.க-வினர் ஊழல் செய்திருப்பதாக அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

அதேபோல, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 1.78 ஆயிரம் கோடி ரூபாயை ஆ.ராசாவும், கனிமொழியும் கூட்டாகச் சேர்ந்து ஊழல் செய்தது அனைவரும் அறிந்ததுதான். இது தொடர்பாக, இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில், சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போதிய ஆதாரமில்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், 2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது.

விருதுநகர்: ராஜேந்திர பாலாஜிக்கெதிரான தி.மு.க போராட்டம்; முஷ்டி முறுக்கிய அ.தி.மு.க! போலீஸ் தடியடி

இது தொடர்பான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது. எனவே, ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க-வுக்குத் தகுதியே இல்லை. ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும்போதும், அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பேசுவதுண்டு. ஆனால், தற்போது வரையிலும் அவரால் ஒரு குற்றச்சாட்டைக்கூட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

வரும் தேர்தலில் தி.மு.க தலைமையிலான ஆட்சி அமையும் என்றும், ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சிறைக்கு அனுப்புவேன் எனவும் வாய்ஜாலம் காட்டிவருகிறார். அவரால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியாது. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியே அமையும். அப்போது மர்மமான முறையில் இறந்த சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் உள்ளிட்ட கொலை வழக்குகள் மீண்டும் தூசுதட்டி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் சிறைக்குச் செல்வார்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு