Published:Updated:

``மேயர் பிரியா என் பொண்ணு மாதிரி; ப்ரஸ்மீட்டில் பேசியதில் உள்நோக்கம் இல்லை"- அமைச்சர் நேரு விளக்கம்

கே.என் நேரு

"மேயர் பிரியாவை ஆணாதிக்கத்தோடு நடத்தவில்லை. என் நாற்காலியை கொடுத்துட்டு நான் தள்ளி உட்கார்ந்துகிட்டேன். திமுகதான் பெண்களுக்கு..." - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

``மேயர் பிரியா என் பொண்ணு மாதிரி; ப்ரஸ்மீட்டில் பேசியதில் உள்நோக்கம் இல்லை"- அமைச்சர் நேரு விளக்கம்

"மேயர் பிரியாவை ஆணாதிக்கத்தோடு நடத்தவில்லை. என் நாற்காலியை கொடுத்துட்டு நான் தள்ளி உட்கார்ந்துகிட்டேன். திமுகதான் பெண்களுக்கு..." - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

Published:Updated:
கே.என் நேரு
சென்னை மாநகர மேயர் பிரியாவை, அமைச்சர் கே.என் நேரு ஒருமையில் பேசி அவமதித்தாக சர்ச்சை எழுந்துள்ளது.

383-வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் நேரு, மேயர் பிரியாவை `ஏம்மா... சொல்லுமா' என ஒருமையில் பேசியது சர்ச்சையானது. `பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை திமுக அவமதிக்கிறது... இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு' என திமுக மீதும் கே.என் நேரு மீதும் சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், கே.என் நேருவைத் தொடர்புகொண்டு பேசினோம்,

மேயர் பிரியா
மேயர் பிரியா
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"திமுகதான் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. 21 மாநகராட்சி மேயர்களில் 11 மாநகராட்சியை பெண்களுக்கு வழங்கியது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு மேயர் பிரியா பேட்டி கொடுக்க முடியாது என்றார். 'நின்னு பேட்டி கொடும்மா' என்றதோடு உட்கார என் நாற்காலியையும் கொடுத்துவிட்டு தள்ளி அமர்ந்துகொண்டேன். மேயரை 'வாம்மா... போம்மா' என்றது மகள் போன்ற அர்த்தத்தில்தான். என்னைவிட வயது குறைந்தவர். பிரியா என் பொண்ணு மாதிரி. இதில், எந்த ஆணாதிக்கத்தனமும் இல்லை. சாதி பாகுபாடும் கிடையாது. அந்த வீடியோவை கட் செய்து பரப்பிக்கொள்பவர்கள் பரப்பிக்கொள்ளட்டும். அதுபற்றியெல்லாம், யோசிக்கமாட்டேன். ஏனென்றால், பிரியா என் பொண்ணு. அதனால், எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார்.