Published:Updated:

தளபதி வெச்சு செஞ்சுடுவார்... அவங்களைப்போல எங்களால இருக்க முடியாது! - அமைச்சர் நேரு

கே.என்.நேரு
News
கே.என்.நேரு

``பல பேர் எங்களை நகர்த்திவிட்டு மந்திரி ஆகுறதுக்குப் பார்க்குறாங்க. அவங்களுக்காகவே நாங்கள் ஓடவேண்டிய சூழல் இருக்கிறது." - கே.என்.நேரு.

``பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க அமைச்சர்கள் என்ன செய்திருக்கிறார்கள்... அவர்களால் சொல்ல முடியுமா? அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை நாங்கள்தான் செய்துகொண்டிருக்கிறோம். அ.தி.மு.க அமைச்சர்கள் சும்மா இருந்ததுபோல் தி.மு.க அமைச்சர்களால் இருக்க முடியாது. அப்படி இருந்தால் தளபதி வெச்சு செஞ்சுடுவார்.’’
முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு
முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு

டிசம்பர் 30-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தரவிருக்கிறார். அவருக்குச் சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். அதில் கே.என்.நேரு கட்சி நிர்வாகிகளிடம் மனம்விட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அவர் தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, ``திருச்சிக்கு வருகை தரும் நம்முடைய தளபதிக்குச் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும். நமக்குள் எந்தவித மனக்கசப்பு இருந்தாலும், அதை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.

திமுக செயற்குழுக் கூட்டம்
திமுக செயற்குழுக் கூட்டம்

திருச்சியில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகம் அமைவதால், நேரடியாகவும் மறைமுகமாகவும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். திருச்சியை எடுத்துக்கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் சாலைகள் உருப்படியாகப் போடப்படவில்லை. கட்டடங்கள் முழுமையாகக் கட்டப்படவில்லை.

திமுக நிர்வாகிகள்
திமுக நிர்வாகிகள்

எந்த இடத்திலும் ஏரி, குளங்கள் முழுமையாகத் தூர்வாரப்படவில்லை. ஆனால் அந்த ஆட்சியில் மக்கள் குறைகள் சொல்லவில்லை. நாம் ஆட்சிக்கு வந்ததும் அத்தனை வேலையும் செய்கிறோம். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளையும் நாம் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மக்கள் நம்மைத்தான் கேள்வி கேட்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வினர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் எல்லோரும் ஜாலியாக பத்து வருடங்களை ஓட்டிவிட்டார்கள். அவர்களைப்போல நாங்கள் இருக்க முடியாது. அப்படி இருந்தால் தளபதி எங்களை வெச்சு செஞ்சுடுவாரு" என்று சொல்ல, கூட்டம் சிரிப்புச் சத்தத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அவர், ``பல பேர் எங்களை நகர்த்திவிட்டு மந்திரி ஆகுறதுக்குப் பார்க்குறாங்க. அவங்களுக்காகவே நாங்கள் ஓடவேண்டிய சூழல் இருக்கிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் அமைச்சர் பதவியில் நாங்க ஒண்ணும் சும்மா சொகுசா உட்கார்ந்திருக்க முடியாது. எல்லா அமைச்சர்களும் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லோரும் நன்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல் எங்கள் செயல்பாடுகள் எப்படி என்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் தளபதி கண்காணித்துக்கொண்டிருக்கிறார். எல்லோரும் சிறப்பா வேலையைச் செய்யுங்கள். அதற்கான கூலி கண்டிப்பாகக் கிடைக்கும்" என்று உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தினார்.