Published:Updated:

``அண்ணாமலைக்கு அடிப்படை கொள்கை, லட்சியம் என்பது இல்லை" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
News
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

``ஏதோ ஒரு கட்சியை தேர்வு செய்துவிட்டு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் அண்ணாமலை என்பது தான் தெரியும்" என்கிறார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

``அண்ணாமலைக்கு அடிப்படை கொள்கை, லட்சியம் என்பது இல்லை" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

``ஏதோ ஒரு கட்சியை தேர்வு செய்துவிட்டு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் அண்ணாமலை என்பது தான் தெரியும்" என்கிறார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

Published:Updated:
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
News
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் பகுதி திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக நிதி வழங்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட திருக்கோயில் நிர்வாகிகளை நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியிலிருந்து அரசு அதிகாரிகள் முன்னிலையில், பேருந்து மூலம் வழி அனுப்பி வைத்தார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் - விழுப்புரம்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் - விழுப்புரம்

கிராமப்புறத்தில் இருக்கின்ற ஆதிதிராவிடர்கள், பழங்குடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இன்றைக்கு ஆன்மீகத்தில் மீதுள்ள அக்கறையின் காரணமாக தமிழகத்தில் சுமார் 2,500 திருக்கோயில்களுக்கு தலா 2 லட்சம் வீதம் நிதி கொடுக்கின்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை முதலமைச்சரிடம் பெறுவதற்காகத்தான் அனைத்து திருக்கோவில் நிர்வாகிகளும் சென்னைக்கு சென்றிருக்கிறார்கள். 'கோயில்களின் உள்ளே ஆதிதிராவிட மக்கள் நுழைய முடியாமல் இருந்தார்கள். அதுவும் கடந்த வாரம் உள்ளே சென்றனர்' என்கிறார்கள். இதுதான் திராவிட மாடலின் நிர்வாகம். யாருக்கு எங்கே சங்கடம் இருக்கிறதோ... அதைக் கேட்டு, தெரிந்து நிவர்த்தி செய்வதுதான் கலைஞரின் பொற்கால ஆட்சி. அதனைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டுள்ளார்.

இம்மக்களுக்கு தமிழகத்திலேயே பாதுகாப்பு இல்லையென்றால், வேறு எங்கு பாதுகாப்பை தேட முடியும். தமிழகத்திலே அவர்களுக்கு 100% பாதுகாப்பு எப்போதும் வழங்கும் திராவிட மாடல் ஆட்சி. சி.வி.சண்முகம் அநாகரிகமாக பேசுகிறார் என்றால், அதிமுக-வை சேர்ந்த அவர் திமுக-வை குறைச்சொல்லாமல் எந்த கட்சியை சொல்லுவார். சிறிய குழந்தை என்றாலும் எழுந்து நின்று வரவேற்பது பெரியார், கலைஞர், தளபதியின் பண்பாடு. எங்களின் தலைமை அப்படிப்பட்டது. ஆனால், அவர்களின் தலைமையை பாருங்கள்... யார் யார் எப்படி அடிமைகளாக இருந்தார்கள், யார் யார் எப்படி செயல்பட்டார்கள் என்று..!

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

யார் என்ன சாப்பிட்டார்களோ அதற்கான ஏப்பம்தான் வரும். அந்த கட்சியின் கொள்கை, லட்சியங்கள் அது. எங்கள் திமுக-வின் லட்சியம், அடிப்படையில் உள்ள சாதாரண தொண்டனில் இருந்து எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும், உரிமைகளை பெற வேண்டும் என்பதுதான். இந்த மக்களின் செல்லப்பிள்ளை உதயநிதி. கலைஞர் தனது சிறுவயதில் என்ன சாதித்தாரோ, அதைவிட கூடுதலாக சாதிக்கும் வாய்ப்பு உதயநிதி பெறுவார். அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இதை நிச்சயமாக சின்ன கலைஞர் உதயநிதி ஸ்டாலின் 100 சதவீதம் நிறைவேற்றிக் கொடுப்பார்" என்றவரிடம், "உதயநிதி துணை முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறதா?" என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து தொடர்ந்தவர், "திமுக-வில் எப்போதும் எடுத்தோம் கவிழ்த்தோம் என எதையும் செய்வதில்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் இருக்கிறது. கடந்த 18 மாதங்களில் 10 அமைச்சரவை கூட்டங்களை நடத்திவிட்டோம்.” என்றார்.

மேலும், ``அண்ணாமலைக்கு, அடிப்படை கொள்கை, லட்சியம் என்பதில்லை. அவரு படிச்சாரு, அவர்களின் பெரியோர்கள் அவரை படிக்க வைத்தார்கள். பின்னர் வேலைக்கு அனுப்பினார்கள். அதற்குப் பிறகு கட்சி என்பதினை... லட்சியத்தோடு, கொள்கையோடு அவர் தேர்வு செய்தது அல்ல. அது அவருடைய விருப்பம். இந்த சினிமா பாக்குற மாதிரி... இந்த படம் பாக்கலாமா! அந்த படம் பாக்கலாமா! என்பது போல.

சி.வி.சண்முகம் - கே.எஸ்.மஸ்தான் - அண்ணாமலை
சி.வி.சண்முகம் - கே.எஸ்.மஸ்தான் - அண்ணாமலை

சில படத்தை பார்த்த இளைஞர்கள், `மூன்று தடவை நான் அந்த படத்தை பார்த்தேன்’ என பெருமையோடு சொல்வார்கள். அதுபோல, ஏதோ ஒரு கட்சியை தேர்வு செய்துவிட்டு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்பதுதான் தெரியும்" என்றார் ஆவேசமாக.