Published:Updated:

செஸ் ஒலிம்பியாட்... திராவிட முன்னேற்றக் கழக குடும்ப நிகழ்ச்சிதான்!

மெய்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
மெய்யநாதன்

- ஒப்புக்கொள்ளும் அமைச்சர் மெய்யநாதன்

செஸ் ஒலிம்பியாட்... திராவிட முன்னேற்றக் கழக குடும்ப நிகழ்ச்சிதான்!

- ஒப்புக்கொள்ளும் அமைச்சர் மெய்யநாதன்

Published:Updated:
மெய்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
மெய்யநாதன்

விளையாட்டுத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு உற்சாகமாக வந்தார் அமைச்சர் மெய்யநாதன். “அடுத்து சேப்பாக்கம் விளையாட்டு மைதானமொன்றை ஆய்வுசெய்யக் கிளம்ப வேண்டும்” என்றார் நம்மிடம். சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளைக் கையில் வைத்திருக்கும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அந்தத் துறையில் என்ன செய்திருக்கிறீர்கள்?”

“கடந்த ஆட்சியில் அமைச்சர் யாரென்றே தெரியாமல் இருந்தது இந்தத் துறை. நாங்கள் பொறுப்பேற்றதும், ஒரு நாளைக்கு 25 லட்சம் பேர் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு அதை எட்டியிருக்கிறோம். கிராமம், நகரம், பள்ளி, கல்லூரி என அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்திக் கொடுத்திருக்கிறோம். தற்போது, ஒரு நாளைக்கு 50 லட்சம் பேர் விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டுவருகிறோம். அடுத்த ஆண்டு அதையும் எட்டுவோம்.”

செஸ் ஒலிம்பியாட்... திராவிட முன்னேற்றக் கழக குடும்ப நிகழ்ச்சிதான்!

“என்ன பிளான் வைத்திருக்கிறீர்கள்?”

“செஸ் ஒலிம்பியாட் வெற்றிக்குப் பிறகு, விளையாட்டுத்துறையில் முன்பைவிட முதல்வர் கூடுதல் கவனம் செலுத்துகிறார். மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த, முதல்வர் 30 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். ஏழு சிறிய உள் விளையாட்டு அரங்கங்கள், மாவட் டம்தோறும் 3 கோடி ரூபாயில் உள்விளையாட்டு அரங்கங்கள், சென்னையில் ஒரு விளையாட்டு நகரம். நான்கு ஒலிம்பிக் அகடமிகள், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம், மாநகராட்சிப் பகுதிகளில் தனியாக விளையாட்டு மைதானங்கள், சனி, ஞாயிறுகளில் போட்டிகள் எனப் பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம்.”

“செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்ததே?”

“சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், இளை ஞரணிச் செயலாளர் உதயநிதியிடம் திறமை இருக்கிறது. அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். தொடக்க, நிறைவு விழா நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டை உலக அளவில் கொண்டுசென்றிருக்கிறோம். அதற்குக் காரணம் உதயநிதிதான். அவரின் பங்களிப்போடு அந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். அதில் என்ன தவறு?”

“ஆனால் தொடக்க, நிறைவு நிகழ்ச்சி முதல்வரின் குடும்ப நிகழ்ச்சியாக இருந்தன என்றார்களே?”

“தொடக்க, நிறைவுவிழா மேடையில் இந்தியப் பிரதமர், தமிழ்நாடு ஆளுநர், முதல்வர், ஒன்றிய விளையாட்டு அமைச்சர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு விளையாட் டுத்துறை அமைச்சர் என நாங்கள் மட்டும்தான் இருந்தோம். சாதாரணத் தொண்டனான எனக்கு அவ்வளவு பெரிய விழாவில் வரவேற்பு அளிக்கும் வாய்ப்பைத் தந்தார் முதல்வர். மற்றவர்கள் சொல்வதுபோல ஒலிம்பியாட் குடும்ப நிகழ்ச்சியா என்றால், ஆம்... அது குடும்ப நிகழ்ச்சிதான். திராவிட முன்னேற்றக் கழகக் குடும்ப நிகழ்ச்சி என்பேன். மற்ற விமர்சனங்களைப் பற்றி எனக்குத் துளியும் கவலை இல்லை.”

“தமிழ்நாட்டின் பாரம்பர்யப் போட்டிகளைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லையே?”

“அப்படியில்லை. ஜல்லிக்கட்டை இன்னும் பிரபலப்படுத்த அனைத்து ஆய்வுகளும் செய்துகொண்டிருக்கிறோம். சிலம்பம், அதோடு தொடர்புடைய அனைத்து விளையாட்டுகளையும் ‘கேலோ இந்தியா’ திட்டத்தில் சேர்ப்பதற்கு ஒன்றிய அரசிடம் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். முதல்வர் கோப்பைக்கான போட்டிகளிலும் சிலம்பம், கபடி போட்டிகளைச் சேர்த்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.”

“தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கபடி உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. அவற்றைக் கண்காணிக்க அரசு ஏதும் செய்வதாகத் தெரியவில்லையே?”

“கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சில இடங்களில் வீரர்கள் இறக்கும் அசம்பாவிதங் கள் நடக்கின்றன. அதைத் தவிர்க்கும் வகையில், கபடி வீரர்களுக்கான சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக் கிறோம். கபடிப் போட்டி நடத்த அரசு சார்பில் இலவச ‘ஃப்ளோர் மேட்’, வாலிபால் போட்டி களுக்கான நெட், பந்துகள் கொடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறோம். எங்கெல்லாம் போட்டிகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அரசு சார்பில் நிதி உதவி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.”

“ஆனால், நீங்கள் கொண்டுவந்த ‘மஞ்சப் பை’ திட்டம் பெரிய அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லையே?”

“கொரோனா காலத்தில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறு சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்தத் திட்டத்தை வெற்றிகர மாகச் செயல்படுத்த, மக்களின் ஒத்துழைப்பும் தேவை. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது என்பது நமக்கு மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததிக்கும் நல்லது என்பதை மக்கள் உணர வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு 90 சதவிகிதம் மக்களின் முயற்சியால்தான் சாத்தியப்படும். பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கும் பைகளைத் துணிப் பைகளாகக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே துணிப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விருக்கிறோம். இவற்றின் மூலம் இந்தத் திட்டத்தை வெற்றிகரமானதாக விரைவில் மாற்றிக் காட்டுவோம்.”

“எட்டுவழிச் சாலை, பரந்தூர் விமான நிலையம் எனச் சர்ச்சைகள் தொடர்கின்றனவே... எப்போது அதற்கெல்லாம் தீர்வு ஏற்படும்?”

“முதல்வராகப் பொறுப்பேற்றதும் மக்களுக்குத் தலைவர் கொடுத்த வாக்குறுதி ‘மக்களைக் கண் இமை பாதுகாப்பதுபோல நான் பாதுகாப்பேன்’ என்பதுதான். மக்களை மட்டுமல்ல, சுற்றுச் சூழலையும் தமிழ்நாடு முதல்வர் பாதுகாப்பார். அனைத்துச் சர்ச்சைகளுக்கும் முதல்வர் தீர்வு கொண்டுவருவார்!”