Published:Updated:

``நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன்" - மதுரை மேயரை எச்சரித்த அமைச்சர் பி.மூர்த்தி

மேயர் இந்திராணியுடன் அமைச்சர் பி.மூர்த்தி

``நீங்களெல்லாம் ஹைடெக்கா குடியிருக்கிறீங்க. இந்த பகுதியில உள்ளவங்கதான் பாவம்" என்று வாகனத்திலிருந்து இறங்காத மேயரை பார்த்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன்" - மதுரை மேயரை எச்சரித்த அமைச்சர் பி.மூர்த்தி

``நீங்களெல்லாம் ஹைடெக்கா குடியிருக்கிறீங்க. இந்த பகுதியில உள்ளவங்கதான் பாவம்" என்று வாகனத்திலிருந்து இறங்காத மேயரை பார்த்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மேயர் இந்திராணியுடன் அமைச்சர் பி.மூர்த்தி

சமீபநாள்களாக பெய்து வரும் மழையால் மதுரை மாநகரமே கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான அமைச்சர் பி.மூர்த்தியின் கிழக்குத் தொகுதி குடியிருப்பு பகுதிக்குள் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

நேற்று பெய்த மழையில் அமைச்சர் பி.மூர்த்தியின் வீடு அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் மழை நீர் குளம் போல தேங்கியது. பொதுமக்கள் புகாரை தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியை பார்வையிட கலெக்டர், மேயர் இந்திராணி, கமிஷனர், அப்பகுதி கவுன்சிலர் உட்பட அதிகாரிகளை அழைத்து சென்று காட்டினார் பி.மூர்த்தி.

அதிகாரிகளுடன் ஆய்வு செய்யும் பி.மூர்த்தி
அதிகாரிகளுடன் ஆய்வு செய்யும் பி.மூர்த்தி

அந்த பகுதிக்குள் மேயரின் கார் சூழ்ந்துள்ள நீரில் சிக்கி செல்லமுடியாமல் திணறியது. இதனால் மேயர் இந்திராணி காரிலிருந்து இறங்காமல் அமர்ந்துகொண்டிருந்தார்.மேயரின் பாதுகாவலர் கதவை திறந்தும் இறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்போது அமைச்சர் பி.மூர்த்தி, ``மேயரம்மா கீழே இறங்கி வந்து பாருங்க| என்று கூறவும், அதன் பின் இறங்கினாராம்.

``டெண்டர் போட்டெல்லாம் இதை சரி பண்ண முடியாது. மூணு வருசமா இந்த பகுதி இப்படியே இருக்குது. போட்ட தார் ரோடு மேலயே ரோடு போட்டுருக்கீங்க. மேயர் பார்த்துக்குங்க, இந்த பகுதியில் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலேன்னா உங்களுக்கு எதிரா நான்தான் உண்ணாவிரதம் இருக்கணும்" என்று மேயர் இந்திராணியிடம் கூறினார்.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

மேலும் ``நீங்களெல்லாம் ஹைடெக்கா குடியிருக்கிறீங்க, இந்த பகுதியில உள்ளவங்கதான் பாவம்" என்றார்.

அதிகாரிகள் தண்ணீரில் இறங்கி பார்க்க தயங்கிய நிலையில், "இந்த பகுதி பூரா இப்படித்தான் இருக்குது. நீங்க வேணும்னா டிரெஸ்ஸை மாத்திட்டு தண்ணில இறங்கி பாருங்க. நான் அப்படியே வருவேன்" என்று அமைச்சர் மூர்த்தி சொல்ல மேயர், கலெக்டர், கமிஷனர் அதிர்ச்சியானர்கள்.

அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக சென்ற அமைச்சர் மூர்த்தி, "ஆனையூர் சங்கீத் நகர் பகுதிகளெல்லாம் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து நிக்கிறது. அந்த பக்கம் போனா தொகுதி மக்கள் நம்மள புடிச்சுக்குவாங்க. தயவுசெய்து ஏதாவது பண்ணுங்க" என மாநகராட்சி கமிஷனரிடம் கெஞ்சாத குறையாக கூறினார்.

மேயர் இந்திராணியுடன் அமைச்சர் பி.மூர்த்தி
மேயர் இந்திராணியுடன் அமைச்சர் பி.மூர்த்தி

மேயர் இந்திராணி் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்பதால் வணிகவரித்துறை அமைச்சரின் தொகுதி கண்டுகொள்ளப்படவில்லை என்று கட்சிகாரர்களால் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று ஆய்வு செய்ய சேறும், சகதியுமாக உள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்று மேயர், கமிஷனருக்கு பரேடு நடத்தினார் பி.மூர்த்தி என்கிறார்கள் கட்சியினர்.