Published:Updated:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரான பொன்முடி மகன்..! எப்படிச் சாத்தியமானது?!

சிகாமணி, பொன்முடி

அசோக் சிகாமணி நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பிலும், முக்கியமான பொறுப்புகளிலும் இருந்துவருவதால் அவருக்கு சீனிவாசனின் ஆதரவு ஏகமனதாக இருந்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரான பொன்முடி மகன்..! எப்படிச் சாத்தியமானது?!

அசோக் சிகாமணி நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பிலும், முக்கியமான பொறுப்புகளிலும் இருந்துவருவதால் அவருக்கு சீனிவாசனின் ஆதரவு ஏகமனதாக இருந்தது.

Published:Updated:
சிகாமணி, பொன்முடி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அவ்வப்போது  பிரச்னைகள்  எழுவதும், பின்னர் அது மங்கிப்போவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது. அந்த வகையில், முன்னாள் தலைவரும் பலம் வாய்ந்த நிர்வாகியாகவும் திகழ்ந்த இந்தியா சிமென்ட்ஸ்  சீனிவாசன் நேரடிப் பதவியில் இல்லாவிட்டாலும், அவர் கைகாட்டும் நபர்தான், தலைவராக இருந்துவருகின்றனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவருடைய அணியைச் சேர்ந்தவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி அறியப்படுகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த ரூபா, 2021-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. துணைத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியே இருந்துவந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

லோகோ
லோகோ

தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி, பிரபு ஆகியோர் இருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலிலிருந்து ஒதுங்கினார். இதனால், அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு  கிரிக்கெட்  சங்கத்  தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதேபோல் தமிழக  கிரிக்கெட் சங்கச் செயலாளராக ஆர்.ஐ.பழனி, பொருளாளராக சீனிவாச ராவ், துணைச் செயலாளராக பாபா ஆகியோரும்  போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அசோக் சிகாமணி விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட்  சங்கத்தின்  செயலாளராகப் பதவி வகித்தவர்.

பொன்முடி
பொன்முடி

அசோக் சிகாமணி நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பிலும், முக்கியமான பொறுப்புகளில் இருந்துவருவதால் அவருக்கு சீனிவாசனின் ஆதரவு ஏகமனதாக இருந்தது. தமிழ்நாடு  கிரிக்கெட் சங்கத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான உறுப்பினர்கள் எப்போதும் சீனிவாசன் பக்கம்தான். இதனாலேயும், இவருடைய ஏகபோக ஆதரவினாலும்தான் தமிழ்நாடு  கிரிக்கெட்  சங்கத்  தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி  தேர்வாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோக, தி.மு.க மூத்த அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதும் இவருக்கு ப்ளஸ்-ஆக அமைந்தது.

சீனிவாசன்
சீனிவாசன்

இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனுக்கு இந்திய கிரிக்கெட்  வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்தபோது எதிர்ப்பு தெரிவித்த திமுக-வினர், இன்று பொன்முடியின் மகனுக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுக்கும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே அசோக் சிகாமணி விகடனுக்கு அளித்த பேட்டியில் "இந்தியாவிலேயே சிறந்த கிரிக்கெட் சங்கம் என்ற பெருமை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உண்டு. அப்படியொரு அசோசியேஷனுக்கு தலைவரானது பெரிய விஷயம். ரொம்பப் பெருமையான தருணம். எனக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதை வெளியில் வேறு மாதிரி பேசுகிறார்கள். முதலில், நான் சீனிவாசன் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்தத் தலைவர் பதவி முழுக்க முழுக்க அவரால்தான் கிடைத்தது.

அசோக் சிகாமணி
அசோக் சிகாமணி

எனது குடும்பத்தினர் அரசியலில் இருந்தாலும் 'எனக்கு இதைச் செய்து கொடுங்கள்' என்று சிபாரிசுக்காகப் போனது கிடையாது. எனக்காக எதையுமே கேட்டதில்லை. விழுப்புரத்தில் பொன்முடி மகன் என்றால்கூட யாருக்கும் தெரியாது. என்னை யாரிடமும் எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதில்லை. அசோசியேஷனில் என்னுடைய வேலையைச் செய்துகொண்டேயிருக்கிறேன். திறமையைப் பார்த்து பொறுப்புகள் தேடிவருகின்றன. அப்படித்தான், டிஎன்சிஏ துணைத் தலைவர் பதவியும் வந்தது. திடீரென்று, சீனிவாசன் சார் போன் செய்து, 'துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்' என்றார். எனக்கு, அதற்கான தகுதி இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். இப்போதும், அவரின் நம்பிக்கையால் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது. நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்” என்றார்.

முழுப் பேட்டியையும் கீழே உள்ள லிங்க்கில் படிக்கலாம்...