Published:Updated:

ஓ.பி.எஸ்ஸே எதிர்க்கிறார்... ஆனால் ராஜேந்திர பாலாஜி? - ரஜினி விவகாரத்தில் முரண்பட்ட அ.தி.மு.க

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

ரஜினி விவகாரத்தில் முரண்பட்ட அ.தி.மு.க!

பெரியார் பற்றி நடிகர் ரஜினி கூறிய கருத்துக்கு தமிழகத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க அமைச்சர்களும் தற்போது ரஜினிக்கு எதிராக முழங்கி வருகிறார்கள். ஆனால், சொந்தக் கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது அ.தி.மு.க-வுக்குள் அடுத்த சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகிறது தி.மு.க. ஆன்மிகவாதிகளைப் பழிதீர்க்கும் செயலை தி.க-வினர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர். ரஜினி பேசியதின் நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தி.மு.க-வின் முகமூடிதான் தி.க. தமிழச்சியைத் திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினியை மிரட்டிப் பார்க்கிறார்களா?

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்ன பயங்கரவாதிகளா. அவர்கள் எங்கு குண்டு வைத்தார்கள்? மகாத்மா காந்தியைக் கொலை செய்தது ஒரு கொலைகாரன். அவன் ஆர்.எஸ்.எஸ் அல்ல. ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்.

பெரியார் போன்றவர்கள் இல்லையென்றால் நான் அமைச்சராக இருக்க முடியாது. ஆனால், ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். நேர்மையாக வாழ்பவர்கள் ஆன்மிகவாதிகளே'' என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.
ஆர்.எம்.முத்துராஜ்

அடிப்படையில் ரஜினி ரசிகரான ராஜேந்திர பாலாஜியின் பேச்சு, ரஜினியை விமர்சித்துப் பேசிய ஓ.பி.எஸ், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு கவுன்டர் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகக் கூறி அ.தி.மு.க-வுக்குள் அடுத்த புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

பின் செல்ல