Published:Updated:

ஜல்லிக்கட்டு : `சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை!’-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அமைச்சர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி
அமைச்சர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழாவை வீரர்களின் உறுதிமொழியோடு தொடங்கிவைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடந்துவருகின்றன.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம்

நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி.மு.க சார்பில் உதயநதி ஸ்டாலின் கலந்துகொண்டனர். நாளை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.

`தமிழ் மொழி, கலாசாரத்துக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்!’ - ராகுல் காந்தி

அரசியல் வி.ஐ.பி-க்கள் வருகையால் கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டம் பரபரப்பாக இருக்கிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழாவை வீரர்களின் உறுதிமொழியோடு தொடங்கிவைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆதாயத்துக்காக ஜல்லிக்கட்டுப் போட்டியை காணவந்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அனைத்தும் கொரோனோ பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றுவருகின்றன. நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வரும் முதலமைச்சர், அடுத்ததாக வரும் 30-ம் தேதி திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்குக் கட்டியிருக்கும் கோயிலைத் திறந்துவைக்க வருகிறார்.

பாலமேடு வாடிவாசலில் அமைச்சர், கலெக்டர்
பாலமேடு வாடிவாசலில் அமைச்சர், கலெக்டர்

ஜல்லிக்கட்டில் விளையாடும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்றுவருகிறது. அது சம்பந்தமாக அரசு விரைவில் அறிவிக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு