Published:Updated:

மதுரை: `யார் ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்’ - ஆர்.பி.உதயகுமார்

பேரிடர் ஒத்திகையில் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் ஒத்திகையில் ஆர்.பி.உதயகுமார் ( என்.ஜி.மணிகண்டன் )

` `செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்’ என பா.ஜ.க தலைவர் முருகன் பேசியிருக்கிறாரே...' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்திருக்கிறார்.

`செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்’ என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசியதற்கு, ``யார் ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி மட்டும்தான் பறக்கும்’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்திருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
என்.ஜி.மணிகண்டன்

மதுரையில், இன்று வருவாய்துறை-பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்வையிட்ட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மூலம் 60 சதவிகிதம் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் பூர்த்தியடையும்.

உயிர், உடைமை, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்க மண்டலக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மற்றும் மீட்புப்பணிகள், நிவாரண முகாம்கள் தயாராக இருக்கின்றன. வடகிழக்குப் பருவமழையொட்டி நீர் சேமிப்புப் பகுதிகளும், நீர்நிலைகளும் குடிமராமத்து செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளன.

எல்.முருகன்
எல்.முருகன்
ஈ.ஜெ.நந்தகுமார்

தமிழகத்தில் வெற்றிகரமாகப் பருவமழையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறோம். கடலோர மாவட்டங்களில் நிரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் இருக்கின்றன. பள்ளி, கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றியிருக்கிறோம். கோவிட் காலம் என்பதால், நிவாரண முகாம்களில் சமூக இடைவெளி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கூடுதலாக ஏற்படுத்தியிருக்கிறோம்’’ என்றார்.

` `செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்’ என பா.ஜ.க தலைவர் முருகன் பேசியிருக்கிறாரே...' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ``எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்.

பேரிடர் ஒத்திகையில் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் ஒத்திகையில் ஆர்.பி.உதயகுமார்
என்.ஜி.மணிகண்டன்

அந்தந்தக் கட்சித் தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர் கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்கத்தான் அவரைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள்’’ என்று பதிலளித்தார் ஆர்.பி.உதயகுமார்.

அடுத்த கட்டுரைக்கு