Published:Updated:

அமைச்சர் Vs சேனாபதி... காங்கேயம் தி.மு.க களேபரம்!

வெள்ளக்கோவில் சாமிநாதன் - கார்த்திகேய சிவசேனாபதி
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளக்கோவில் சாமிநாதன் - கார்த்திகேய சிவசேனாபதி

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர்.

அமைச்சர் Vs சேனாபதி... காங்கேயம் தி.மு.க களேபரம்!

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர்.

Published:Updated:
வெள்ளக்கோவில் சாமிநாதன் - கார்த்திகேய சிவசேனாபதி
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளக்கோவில் சாமிநாதன் - கார்த்திகேய சிவசேனாபதி

ஒன்றியச் செயலாளர் விவகாரத்தில் சிட்டிங் அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும், கார்த்திகேய சிவசேனாபதி தரப்புக்குமான மோதலே இப்போது திருப்பூர் மாவட்ட தி.மு.க-வில் ‘ஹாட் டாபிக்.’

இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி ஆதரவாளரும், தி.மு.க முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளருமான ஈஸ்வரன் நம்மிடம், “கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களை, அப்படியே பதவியில் தொடரவிடுங்கள் என்றுதான் தலைமை சொல்லியிருக்கிறது. ‘தமிழ்நாட்டிலுள்ள டாப் 10 ஒன்றியச் செயலாளர்களை எடுத்தால், அதில் சிதம்பரம் நிச்சயம் இடம்பெறுவார்’ என்று ஆ.ராசாவே பாராட்டியிருக்கிறார். காங்கேயம் வடக்கு ஒன்றியத்தில் இருக்கும் 400 பிரதிநிதிகளில் 320-க்கும் மேற்பட்டோர் எங்கள் தரப்புக்குத்தான் ஆதரவு. இருப்பினும், சாமிநாதன் பிடிவாதமாக இருந்த காரணத்தால் எங்களுக்குப் பொறுப்பு வழங்கப்படவில்லை.

வெள்ளக்கோவில் சாமிநாதன் - கார்த்திகேய சிவசேனாபதி
வெள்ளக்கோவில் சாமிநாதன் - கார்த்திகேய சிவசேனாபதி

‘தேர்தல் நேரத்தில் நாங்கள் கார்த்திகேய சிவசேனாபதிக்காக தொண்டாமுத்தூர் சென்றுவிட்டோம். இந்த ஒன்றியத்தில் தி.மு.க-வைவிட, அ.தி.மு.க அதிக வாக்கு வாங்கிவிட்டது’ என்றெல்லாம் தலைமையிடம் பொய்ப் புகார் சொல்லியிருக்கிறார்கள். சாமிநாதனின் சொந்தப் பஞ்சாயத்திலேயே அ.தி.மு.க-தான் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறது. காங்கேயம் அ.தி.மு.க கோட்டை. இங்கு நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என மக்களைக் கேட்டாலே தெரியும். இன்று எங்களை உதாசீனப்படுத்திவிட்டு ஆள் கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ள கருணை பிரகாஷ் என்பவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர்” என்றார்.

காங்கேயம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை இழந்த சிதம்பரமோ, “30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருக்கிறேன். எனக்குப் பதவி இல்லை என்பதுகூடப் பிரச்னை இல்லை. என்னுடன் சேர்த்து கட்சிக்காக உழைத்த அனைவரையும் முழுமையாகப் புறக்கணித்துவிட்டனர். தேர்தலையே நடத்தாமல், என்னிடமிருந்து பதவியைப் பிடுங்கி அவரிடம் கொடுத்துள்ளனர். சாமிநாதன் எப்போதுமே எங்களை மாற்றுக் கட்சியினர்போல்தான் பார்ப்பார். தலைமையும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அதிருப்தியாக இருக்கிறது” என்றார்.

ஈஸ்வரன், சிதம்பரம், கருணை பிரகாஷ்
ஈஸ்வரன், சிதம்பரம், கருணை பிரகாஷ்

தி.மு.க காங்கேயம் வடக்கு ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கருணை பிரகாஷிடம் கேட்டபோது, “நான் கட்சியில் நீண்டகாலமாக இருக்கிறேன். என்மீது போடப்பட்டது பொய் வழக்கு. அதைத் தள்ளுபடி செய்துவிட்டனர். காழ்ப்புணர்ச்சி காரணமாக இதைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.

செய்தித்துறை அமைச்சரும், தி.மு.க திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான மு.பெ. சாமிநாதனிடம் கேட்டோம். “இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர். இது தலைமையின் முடிவு. ஒன்றியக் கழகமானது கட்சியின் மாவட்டக் கழகத்துக்கும் தலைமைக்கும் கட்டுப்பட வேண்டும். ஆனால், இவர்கள் தலைமை சொல்வதையே கேட்க மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக கார்த்திகேய சிவசேனாபதி தலைமையிலான இவர்கள், என்னை மட்டம் தட்டும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர்” என்றார்.