சமகால அரசியலில் அவ்வப்போது சில நல்ல விஷயங்களும் அரங்கேறுவதுண்டு. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி, சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசனின் அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. சந்திப்புக்குப் பிறகு, ‘‘தி.மு.க-வினரால் படுகொலை செய்யப்பட்ட லீலாவதிக்காக முதலில் குரல்கொடுத்தது நாங்கள்தான். அப்போது நான் மாநகராட்சி உறுப்பினர். அப்போதே தோழர்களுடன் பரிச்சயம் அதிகம்” என்று தி.மு.க-வுக்கு திகில் கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

‘‘மத்திய அரசிடமிருந்து மதுரை மாநகருக்கு நிதி பெறுவது குறித்துப் பேசவே எம்.பி-யைச் சந்தித்தேன். இது ஒன்றும் அதிசயமல்ல. கொள்கைகள் வேறாக இருந்தாலும், மக்கள் நன்மைக்காக இணைந்து செயல்படுவது தவறல்ல. நாங்கள் இருவரும் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள். நகரின் பிரச்னைகள்குறித்து எங்களுக்குத்தான் அதிகம் தெரியும். தவிர, அனைவருடனும் இணைந்து செயல்படும்படி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கூறியிருக் கின்றனர். கீழடி அகழ்வாய்வுக்கு தொடர்ந்து குரல்கொடுத்தவர் சு.வெங்கடேசன். அதை ஏற்று, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆறாம்கட்டப் பணிகளும் தொடங்கிவிட்டன. ஆரம்பக்காலத்திலிருந்து பொதுவுடைமைத் தோழர்களுடன் துணை நின்று மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுப்பவர்கள் நாங்கள். இந்தச் சந்திப்பு, ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக சு.வெங்கடேசனின் எழுத்துக்கு தீவிர வாசகன் நான்.

சிலர், ‘இந்தச் சந்திப்பில் அரசியல் இருக்கிறது; தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் செல்லூர் ராஜு சி.பி.எம் தோழரைச் சந்தித்தார்’ என்றெல்லாம் கூறுகிறார்கள். உண்மையில் இந்தச் சந்திப்பில் உள்நோக்கமெல்லாம் எதுவுமில்லை. குறிப்பாக, இதில் அரசியல் இல்லவேயில்லை. முழுக்க முழுக்க மக்கள் நன்மைக்காகவே வெங்கடேசனைச் சந்தித்தேன்” என்றார்.

இந்தச் சந்திப்புகுறித்து சு.வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘மக்கள்நலப் பணிகளில் மாநில அமைச்சர்களுடன் இணைந்து செயல்படுவதன்மூலம், நகரின் வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும். இந்த ஆரோக்கியமான நடைமுறையை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கிவைத்துள்ளார். இதுபோல் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் அமைச்சர்கள் ஆலோசித்து செயல்பட்டால் மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். மற்றபடி இதில் அரசியல் எதுவுமில்லை’’ என்றார்.

நல்லவை தொடரட்டும்!