Published:Updated:

மதுரை: `எம்.ஜி.ஆர் மடியில் இருந்தவர்களெல்லாம் அவர் வாரிசாக முடியாது!’ - செல்லூர் ராஜூ

படகு சவாரி செய்யும் செல்லூர் ராஜூ
படகு சவாரி செய்யும் செல்லூர் ராஜூ

``அ.தி.மு.க இரண்டாக உடையும் என்று கட்சியின் செல்வாக்கைச் சீர்குலைக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அ.தி.மு.க-வில் இரு பெரும் தலைவர்கள் உருவாகியிருக்கும் நிலையில் அது நடக்காது” என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரியைத் தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அப்போது அவர், ``மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மதுரை மக்களுக்கு மெரினாவாக மாறியிருக்கிறது’’ என்றவர், ``அ.தி.மு.க இரண்டாக உடையும் என்று கட்சியின் செல்வாக்கைச் சீர்குலைக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அ.தி.மு.க-வில் இரு பெரும் தலைவர்கள் உருவாகியிருக்கும் நிலையில் அது நடக்காது.

பொங்கல் தொகுப்பு டோக்கனை அ.தி.மு.க-வினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறுவதில் சிறிதும் உண்மையில்லை. ரேஷன் கடை ஊழியர்கள்தான் வழங்குகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்குச் சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. சீருடை இல்லாமல் கடையில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாரியம்மன் தெப்பக்குளம்
மாரியம்மன் தெப்பக்குளம்

நடிகர் ரஜினி ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் என்பதால் நல்ல முடிவு எடுத்திருக்கிறார். தன்னை நம்பியிருக்கும் ரசிகர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ரஜினி எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன்.

`ஓர் அரசியல் புரட்சி உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது!’ - பரமக்குடியில் கமல்ஹாசன்

திரைத்துறையில் தமிழகத்துக்குப் பல்வேறு பெருமைகளைச் சேர்த்தவர் கமல்ஹாசன். அவர் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கலாம். அரசியலில் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.

படகு சவாரி செய்யும் செல்லூர் ராஜூ
படகு சவாரி செய்யும் செல்லூர் ராஜூ

கமல்ஹாசனுக்கு வராததை விட்டுவிட வேண்டும். நடிகர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. எம்.ஜி.ஆர் மடியில் இருந்தவர்களெல்லாம் அவர் வாரிசாக முடியாது" என்றார்.

பின்பு மதுரை கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மீனாசியம்மன் கோயில் அதிகாரிகளுடன் சேர்ந்து படகில் பயணித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அடுத்த கட்டுரைக்கு