Election bannerElection banner
Published:Updated:

`கட்சியைவிட்டு நீக்கியபோது எம்.ஜி.ஆர் பெரியப்பாவாகத் தெரியவில்லையோ?’- செல்லூர் ராஜூ கேள்வி

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

`எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது பெரியப்பா கட்சியில் ஸ்டாலின் சேர்ந்திருக்கலாமே? அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் பெரியப்பா, சித்தப்பா எனக் கூறுகிறார்’ - செல்லூர் ராஜூ.

`` `உன் பெரியப்பாவாக இருந்து சொல்கிறேன். நீ நன்றாகப் படி. அதேநேரம் அரசியல் ஆர்வத்தையும் கவனிக்க வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர் எனக்கு அறிவுரை கூறினார்" என்று மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியதை அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடியில் மழைநீர்க் கால்வாய் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, ``இந்த ஆண்டு அதிகபட்சமாக 96.20 சதவிகிதம் பொங்கல் பரிசு வழங்கியிருக்கிறோம். மத்திய அரசு பட்ஜெட்டில் ரேஷன் கடைப் பொருள்களின் விலையை உயர்த்தினாலும், நாம் இலவசமாகக் கொடுக்கிறோம்.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. தான் திருடி, பிறரை நம்பாதவர்கள் அவர்கள். அதனால்தான் எங்கள் ஆட்சியில் ஊழல் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

தேர்தல் நெருங்குவதால், எம்.ஜி.ஆரை பெரியப்பா, சித்தப்பா என்றெல்லாம் கூறுகிறார். எம்.ஜி.ஆரை இழிவாகவும், வாங்காத கப்பலை வாங்கியதாகவும் முரசொலியில் எழுதியவர்கள் தி.மு.க-வினர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

கலைஞர், எம்.ஜி.ஆரை இழிவாகப் பேசிய காலத்தில் பெரியப்பா எனத் தெரியவில்லையோ... கட்சியைவிட்டு நீக்கியபோது எம்.ஜி.ஆர் பெரியப்பாவாகத் தெரியவில்லையோ?

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது பெரியப்பா கட்சியில் ஸ்டாலின் சேர்ந்திருக்கலாமே? அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் பெரியப்பா, சித்தப்பா எனக் கூறுகிறார். எந்தத் தலைவருக்கும் இல்லாத செல்வாக்கு எம்.ஜி.ஆருக்கு உண்டு.

ஒருகாலத்தில் எம்.ஜி.ஆரை ஆருயிர் நண்பர் எனவும், தன்னைத் தேர்ந்தெடுத்தால், பிறகு ஆட்சியை எம்.ஜி.ஆரிடம் கொடுத்துவிடுவேன் எனப் பேசியவர்தான் கலைஞர். அப்படியே அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறார் ஸ்டாலின்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

கலைஞரின் பொய்யை அன்று மக்கள் நம்பவில்லை. தற்போது எம்.ஜி.ஆரை பெரியப்பா சித்தப்பா என ஸ்டாலின் கூறினாலும் தமிழகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்" என்றார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு