Published:Updated:

`பெரியாரை இழிவுபடுத்தியதைக் கண்டிக்கிறேன்; தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி!' -செல்லூர் ராஜு

`பெரியார் பற்றி இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டவர்களைக் கண்டிக்கிறேன். பெரியார்தான் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொடுத்தார். தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி'.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``தமிழ்நாடு சகோதரத்துவத்துடன் இருக்க பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர்தான் காரணம். பெரியாரை யார் இழிவுபடுத்திப் பேசினாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்" என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

மறைந்த முதலைமச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி மதுரையிலுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு,``ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பிளவுபடும் என ஆருடம் சொன்னவர்களின் வாக்கு பழிக்கவில்லை. ஐயாயிரம் மைலுக்கு அப்பால் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
ஈ.ஜெ.நந்தகுமார்

தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சி கலைந்து விடும் எனச் சொன்னார். ஆனால், ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது'' என்றார். அப்போது, `பெரியாரை பி.ஜே.பியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்களே?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ``பெரியார் பற்றி இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டவர்களைக் கண்டிக்கிறேன். பெரியார்தான் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொடுத்தார். தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி. பல மாநிலங்கள் பிளவுப்பட்டு இருந்தாலும் தமிழகம் என்றுமே ஒன்றுபட்டுள்ளது. தமிழ்நாடு இன்று சகோதரத்துவத்துடன் இருக்க காரணம் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றோர்தான்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

பெரியாரை யார் இழிவுபடுத்திப் பேசினாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்" என்று செல்லூர் ராஜு பதிலளித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் பி.ஜே.பியை ஆதரித்தும் திராவிடக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வரும் நிலையில் செல்லூர் ராஜு பெரியாரை உயர்த்திப்பேசியது அவர்கள் கூட்டணியிலுள்ள பி.ஜே.பியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.