Published:Updated:

`நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம்; ஆனால், செல்வாக்கு?!’ - அமைச்சர் செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு ( என்.ஜி.மணிகண்டன் )

பெரியார் கொள்கைகளில் சில விஷயங்கள் சிலருக்கப் பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்குப் பிடித்திருக்கலாம்.

``தந்தை பெரியாரைப் பற்றி தேவையில்லாமல் ஒருவர் பேசியதால், இப்போது பெரியார் பெயர் ஊடகங்களில் டிரெண்டிங்காகி உள்ளது. நாங்களும் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவர்கள்தாம்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
என்.ஜி.மணிகண்டன்

மதுரை முனிச்சாலையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு, ``எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் இந்நாளில் அவர் சாதனைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். வறுமையின் கொடுமையை சிறு வயதில் அனுபவித்ததால் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தார். மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்க கிராமத்துக்கு ஒரு ரேஷன் கடை கொண்டு வந்தார்.

இப்போதெல்லாம் சில நடிகர்களுக்கு நாலைந்து படங்களில் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசை வந்துவிடுகிறது. இவர்கள் பணத்துக்காக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்வதற்காக நடித்தவர் எம்.ஜி.ஆர். இப்போதுள்ள நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், மக்கள் செல்வாக்கு இல்லை.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
என்.ஜி.மணிகண்டன்

எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஒவ்வொன்றும் மக்களை நல்வழிப்படுத்தியது. இப்போதுள்ள பாடல் அப்படியா உள்ளது? (அச்சம் என்பது மடமையடா, வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும், மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என சில பாடல்களைப் பாடிக்காட்டினார்) கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கலைஞரே எம்.ஜி.ஆரைப் பாராட்டினார்.

தந்தை பெரியாரைப் பற்றி தேவையில்லாமல் ஒருவர் பேசுகிறார். அவர் பேசியதால் பெரியார் பெயர் ஊடகங்களில் டிரண்டிங் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்களும் திராவிட கழகத்திலிருந்து வந்தவர்கள்தாம்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
என்.ஜி.மணிகண்டன்

பெரியார் கொள்கைகளில் சில விஷயங்கள் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்குப் பிடித்திருக்கலாம். அதனால்தான் அறிஞர் அண்ணா தனியாகக் கட்சி தொடங்கினார். அதே நேரம் பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்தான்'' என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு