Published:Updated:

`பா.ஜ.க-தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்!’ - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``அழகிரியைப் புறந்தள்ளிவிட்டு தி.மு.க ஆட்சிக்கு வருவது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி தொடங்கினால் தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படும்" - செல்லூர் ராஜூ.

`முதல்வர் வேட்பாளரை கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் அறிவிக்கும்’ என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சமீபகாலமாகக் கூறிவருகிறார்கள். இது அ.தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், அதே கருத்தை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரை பழங்காநத்தத்தில் மினி கிளினிக் திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``நாளை தொடங்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் 2021-ல் வெற்றியைத் தீர்மானிக்கும்.

எடப்பாடி பழனிசாமியை கொதிக்கவைத்த சீட் பேரம்..! - முருகன் கொளுத்திய `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சிபெற்ற மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில்கூட தாலிக்குத் தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால், தமிழகத்தில்தான் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுவருகிறது. கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்துக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற கண்ணோட்டம் தவறானது. 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இரண்டு இடங்கள் மட்டுமே பிடித்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்’’ என்றார்.

`கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!

முதல்வர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க-வினரின் கருத்துப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``பாரதிய ஜனதா கட்சி, அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்தியத் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

தேசியக் கட்சி கூட்டணியில் இருப்பதால் முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சி அறிவிக்கக் கூடாது" என்றார்.

தொடர்ந்து பேசியவர்,``அழகிரியின் செயல்பாடுகள் மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். அழகிரி, தன் கொள்கையிலிருந்து மாறாதவர். அண்ணன் அழகிரி முறையாகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுபவர்.

கலைஞர் கருணாநிதியிடமுள்ள அனைத்துத் திறமைகளும் அழகிரியிடம் இருக்கிறது. ஆனால், தி.மு.க., அழகிரியைத் தொடர்ந்து புறக்கணித்துவருகிறது. எதிர்க்கட்சிகளை வளரவிடக் கூடாது என்பதில் கலைஞரைப் போன்று செயல்படுபவர் அழகிரி.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

எதிர்க்கட்சியாக இருந்தபோது, நாங்களே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அழகிரியிடம் ரௌடிகளாக இருந்தவர்கள் எல்லோரும் தி.மு.க-வுக்குச் சென்றிருக்கிறார்கள்.

தி.மு.க ஆட்சியின்போது கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் என்னை விடுவித்தது.

அம்மா கிளினிக் திறப்புவிழா
அம்மா கிளினிக் திறப்புவிழா

அழகிரியைப் புறந்தள்ளிவிட்டு தி.மு.க ஆட்சிக்கு வருவது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி தொடங்கினால் தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு