Published:Updated:

``திமுக-வின் 6 மாத ஆட்சி வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் இனிதான்!"- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு
News
தங்கம் தென்னரசு

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்றோர், கணவரை இழந்தவர்களுக்கான உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் என 982 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு
நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ``தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, தமிழகம் கொரோனாவின் பிடியிலிருந்தது. அப்போது ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவியது. அவர் பதவி ஏற்ற 6 மாதங்களில் கொரோனாவிலிருந்து ஸ்டாலின் தமிழகத்தை மீட்டிருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் ஒய்வின்றி உழைத்து வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 10 ஆண்டுகளாக திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வர போராடினோம். அப்போது தி.மு.க எதிர்கட்சியாக இருந்ததால், அது நடக்கவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சிப்பொறுப்பு ஏற்ற முதல் சட்ட மன்றக் கூட்டத்திலேயே திருச்சுழியில் அரசுக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தற்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில், கடந்த 6 மாத தி.மு.க ஆட்சி, வெறும் ட்ரைலர்தான். இன்னும் மீதமுள்ள நாலரை ஆண்டுகளில் மெயின் பிக்சராக முதல்வர் நிறைய திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற இருக்கிறார்” என்றார்.