Published:Updated:

`எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை; ஆனால் ஒரு விஷயத்தில்?'- அரசு விழாவில் ஆர்.பி.உதயகுமார்

செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார்
செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார்

`எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜன்செல்லப்பா ஆகியோருக்குமிடையே மனகசப்பு இருப்பதாக எண்ணியவர்கள் ஏமாற்றமடைவார்கள்.'

''எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பாவுக்குமிடையே எந்த மனக்கசப்பும் இல்லை. அப்படி இருப்பதாக நினைப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள்'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களை வைத்துக்கொண்டு அரசு விழாவில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு
ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு

மதுரை மாவட்ட அ.தி.மு.க அரசியலில் நீண்டகாலமாகவே கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. அதிலும் ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் என்பதால் கட்சியினர் இரண்டு அணியாக மட்டுமல்ல, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவையும் சேர்த்து மூன்று அணியாகச் செயல்பட்டு வந்தனர். அவர்கள் நடத்துகிற நிகழ்ச்சிகள் மூலம் இது வெளிப்பட்டது. இந்தநிலையில் இன்று மூவரும் ஒரே நிகழ்ச்சியில் ஒற்றுமையாகக் கலந்துகொண்டது கட்சியினர் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆர்.பி.உதயகுமாரின் தொகுதியான திருமங்கலம் ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன், அமைச்சர் செல்லூர்ராஜு எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியால் செயல்பட முடியுமா என்று கேட்டவர்கள், இன்றைக்கு அவரால்தான் முடியும் என்று சொல்ல வைத்துள்ளார்.

ஆமாம்... நான் ஒன்பதாவது அதிசயம்தான்! - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒப்புதல்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தின் முன்னேற்றங்கள் பற்றி சிந்தித்து வருவதால் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். பொங்கல் பரிசாக ஒவ்வொரு இல்லத்துக்கும் ரூ.1,000-வை கொண்டுபோய் சேர்த்தது சாதனையே.

மக்களோடு எப்போதும் தொடர்போடு இருப்பது கூட்டுறவுத்துறையும் வருவாய்த்துறையும்தான். அந்த இரு துறையும் மதுரைக்குக் கிடைத்தது பெருமைக்குரியது. இன்றைக்கு வருவாய்த்துறையுடன் கூட்டுறவு துறை சேர்ந்து இருப்பதும் சிறப்பானது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோருக்குமிடையே மனகசப்பு இருப்பதாக எண்ணியவர்கள் ஏமாற்றமடைவார்கள். நீண்ட நாள்களாக எங்களுக்கிடையே பிரச்னை இருந்து வருவதாகப் பலர் நினைக்கின்றனர். அது தவறானது. எங்களின் ஒரே லட்சியம் ஜெயலலிதாவின் புகழைக் காப்பதே ஆகும். அதில்தான் போட்டி உண்டு. நாங்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம்'' என்று பேசி கட்சியினரை அதிர வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு