சமீபத்தில், பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகளை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில், ‘பத்திரிகைகள் தங்கள் கடமையைச் செய்யும்போது எப்படி அவதூறு வழக்கு தொடர முடியும்?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பிலோ, சரமாரியாக எதிர்த் தரப்பினர்மீது அவதூறு வழக்குகள் பாய்ந்து கொண்டேயிருக்கின்றன. இதைக் குறிப்பிடும் அரசியல் நோக்கர்கள், ‘இதுபோன்ற செயல்பாடுகள் மக்களிடம் அமைச்சரின் செல்வாக்கைக் குறைக்குமே தவிர, வேறு எதற்குமே உதவாது’ என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

* 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் பிரசாரம் செய்தபோது, அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறாகப் பேசியதாக அவர்மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

* உள்ளாட்சித்துறையில் பல்வேறு ஊழல்களை வெளியிட்ட அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மீது சென்னையில் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணியிலும் அமைச்சர் தரப்பினர் இருந்ததாக அறப்போர் இயக்கம் குறிப்பிடுகிறது.

* முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தி.மு.க பிரமுகரின் நண்பரான சென்னையைச் சேர்ந்த வெப்டிசைனர் சுதர்சன் கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில், கோவையில் ‘சிம்ப்ளிசிட்டி’ என்ற இணையதள ஊடக நிறுவனர் ஆண்ட்ரூ சாம் கைதுக்குப் பின்னணியிலும் அமைச்சர் தரப்பினர் இருக்கிறார்கள் என்றும் புகார் எழுந்தது.

*மே மாதம், 20-ம் தேதி கோவை ஆத்துப்பாலத்தில் தி.மு.க சார்பில் ரம்ஜான் பண்டிகைக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை’ என்று மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முத்துச்சாமிமீது குனியமுத்தூர் போலீஸார் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

*மே 28-ம் தேதி, அமைச்சர் வேலுமணிமீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தி.மு.க-வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்மீது கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ-வுமான நா.கார்த்திக் கூறுகையில், “கோவையில் அனைத்துத் துறைகளிலும் வேலுமணியின் ஆதிக்கம் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ தி.மு.க-வினர்மீது வழக்கு போட்டு அடக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றாததற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். அதற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைச்சர் வேலுமணியின் உத்தரவைத்தான் காவல்துறையினர் நிறைவேற்றிவருகின்றனர். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றார் ஆவேசமாக.

உள்ளாட்சித்துறை டெண்டர் முறைகேடுகளை அம்பலப்படுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர் அறப்போர் இயக்கத்தினர். அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன், “சமுதாயத்தில் தனது பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்கிறார் அமைச்சர் வேலுமணி. எங்கள்மீது 15 மான நஷ்டஈடு வழக்குகள் மற்றும் பல்வேறு காவல்நிலையங்களில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருமுறை சென்னை காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனே, ‘அமைச்சர் வேலுமணியைப் போய்ப் பாருங்கள்’ என்று சொன்னார். ‘நாங்கள் முடியாது’ என்று சொன்ன பிறகுதான், எங்கள்மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பதிவு செய்தனர். இப்படிச் செய்வதால் அமைச்சரின் பெயர் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகத்தான் பாதிக்கப்படும்; ஜனநாயக மற்றும் கருத்துரிமை கோரும் குரல்களுக்கு அவர் மதிப்பளிக்க வேண்டும்; எல்லா வற்றுக்கும் மேலாக நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்” என்றார் தெளிவாக.

இவற்றையெல்லாம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேசினோம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், “நான் யார்மீதும் புகார் அளிப்பதில்லை. வழக்கும் தொடர்வதில்லை. சமீபத்தில் கோவையில் ஒரு விபத்து நடந்தது. அதற்கு தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் போராட்டம் நடத்தி, என்னைக் கைது செய்ய வேண்டும் என்று புகாரும் அளித்துள்ளனர். காவல்துறையில் நான் எப்போதும் ஆதிக்கம் செலுத்த மாட்டேன். மது அருந்திவிட்டு போலீஸில் சிக்கியவர்களை விடச்சொல்லி போன் செய்வார்கள். நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சொல்லப் போனால், இங்கிருக்கும் தி.மு.க-வினர் அனைவருமே என்னுடன் நல்ல தொடர்பிலிருக்கிறார்கள். நிறைய உதவிகளை வாங்கிக்கொள்கின்றனர். பலருக்குக் கல்லூரிகளில் அட்மிஷன் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் அரசியலுக்காக என்னை எதிர்ப்பதுபோல வெளிப்படுத்திக்கொள்கின்றனர். மீண்டும் சொல்கிறேன்... காவல் துறையை அழைத்து ஒருபோதும் நான் அழுத்தம் கொடுத்தது இல்லை. அது தவறாகிவிடும் என்பதையும் நான் அறிந்தே இருக்கிறேன்” என்றார்.