Published:Updated:

கோடிகளில் புரளும் அமைச்சரின் உதவியாளர்!

பணம்
பிரீமியம் ஸ்டோரி
பணம்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி, அவரின் ஜூனியர் பி.ஏ-வான ரவி என்கிற டைப்பிஸ்ட் ரவி, நூறு கோடி ரூபாய்க்குமேல் கொள்ளையடித்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சி விலகாமல் பேசுகின்றன.

கோடிகளில் புரளும் அமைச்சரின் உதவியாளர்!

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி, அவரின் ஜூனியர் பி.ஏ-வான ரவி என்கிற டைப்பிஸ்ட் ரவி, நூறு கோடி ரூபாய்க்குமேல் கொள்ளையடித்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சி விலகாமல் பேசுகின்றன.

Published:Updated:
பணம்
பிரீமியம் ஸ்டோரி
பணம்

பெயர் வெளியிட விரும்பாத சில சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். ‘‘தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக வேலைபார்த்தவர் டைப்பிஸ்ட் ரவி. தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜூனியர் பி.ஏ-வாக உள்ளார்.

கோடிகளில் புரளும் அமைச்சரின் உதவியாளர்!

மைச்சர்களின் அலுவலகங்களுக்கு வரும் அப்பாவி பொதுமக்கள்தான் இவரின் டார்கெட். பல்வேறு அமைச்சர்களின் அலுவலகங்களுக்குள்ளும் புகுந்து புறப்படும் இவர், அங்கு வரும் மக்களிடம் பல்வேறு வேலைகளை முடித்துத் தருவதாகச் சொல்லி லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். இதற்கு பல்வேறு அமைச்சர்களின் பி.ஏ-க்களும் உடந்தை.

குறிப்பாக உயர்கல்வித் துறை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அலுவலகங்களுக்குச் சென்று, டிரான்ஸ்ஃபர் வாங்கித் தருவதாகச் சொல்லி, பலரிடம் பல லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளார். இவர் தற்போது எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்காகப் பலரிடம் முன்பணமாக பல கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு, தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாகவும் சொல்லி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு மாதத்துக்கு முன்பு தன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றார். கொள்ளையடித்த பணத்தையெல்லாம் சிங்கப்பூரில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளார். தமிழ்நாட்டின் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போன்ற பகுதிகளிலும் ரிசார்ட்கள், சொகுசு பங்களாக்கள் வாங்கியிருக்கிறார். அவர் மனைவி பெயரில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் 50 லட்சம் ரூபாயில் சர்ஜிக்கல் கம்பெனி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

குட்கா முறைகேடு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரை சி.பி.ஐ விசாரணை செய்யும்போது, சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் சிக்கி, இவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய தமிழ்நாடு அரசு முத்திரையை அவர்களுக்கு இணையாக இவருடைய வாகனத்திலும் பயன்படுத்தி வருகிறார். மேலும், பல அமைச்சர்களிடம் சென்று ‘உங்களிடம் அண்ணன் அந்த வேலையை முடித்துக் கொடுக்கச் சொன்னார்’ என்று சொல்லி அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தெரியாமலேயே மற்ற அமைச்சர்களிடம் வேலையை முடித்து காசு பார்க்கிறார். மெடிக்கல் காலேஜ் அட்மிஷனிலும், கல்லூரிக் கோட்டாவைப் பயன்படுத்தி கோடிகள் சம்பாதிக்கிறார். நீட் தேர்வு கொண்டுவந்ததும், ஒரு சீட்டுக்கு முன்பு வாங்கிய தொகையைவிட தற்போது அதிகமாக வசூலிக்கிறார்’’ என்றார்கள்.

இதுகுறித்து டைப்பிஸ்ட் ரவியைத் தொடர்புகொண்டோம். ``அமைச்சருடன் நான் நெருக்கமாக இருப்பது சில பி.ஆர்.ஓ-க்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள்தான் என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் முதலீடு செய்வதற்காக சிங்கப்பூர் செல்லவில்லை. அது குடும்பச் சுற்றுலாதான். இந்தக் குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மையில்லை’’ என்றார்.