Published:Updated:

``மிஸ்டுகால் கட்சியெல்லாம் ஒருபோதும் எதிர்க்கட்சியாக முடியாது!" - பாஜக-வைச் சாடிய கி.வீரமணி

கி.வீரமணி

`சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள்தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருக்க முடியும்!' - கி.வீரமணி

``மிஸ்டுகால் கட்சியெல்லாம் ஒருபோதும் எதிர்க்கட்சியாக முடியாது!" - பாஜக-வைச் சாடிய கி.வீரமணி

`சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள்தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருக்க முடியும்!' - கி.வீரமணி

Published:Updated:
கி.வீரமணி

திராவிடர் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

கி.வீரமணி
கி.வீரமணி

அந்த வகையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நேற்றைய தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மத்திய அரசைச் சாடிப் பேசினார். ``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவருவதை மீட்டெடுப்பதே திராவிட மாடல் ஆட்சி. மேலும் மக்கள் நலம், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே திராவிட மாடல் ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் தாங்கள்தான் எதிர்க்கட்சி எனப் பொய் பரப்புரை செய்துவருகின்றனர். அவர்கள் எப்போதும் தமிழ்நாட்டில் ஒரு கட்சியாகத்தான் இருக்க முடியும்... எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆகவே முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள்தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளாகவும், ஆளுங்கட்சிகளாகவும் இருக்க முடியும்.

கி.வீரமணி
கி.வீரமணி

மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் ஒருபோதும் எதிர்க்கட்சியாக முடியாது. சமத்துவ சிந்தனை, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனைகளால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி" என்றார்.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism