Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க-வில் ஓங்கும் சுனிலின் கரம்... தி.மு.க-வுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை சிக்னல்!

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சுனிலுக்கு அத்துப்படி. இன்றைக்கு தி.மு.க-வில் புதிதாக என்ன திட்டம் தீட்டினாலும் அது அ.தி.மு.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறதாம்

"அ.தி.மு.க முகாமுக்கு சுனில் வந்ததன் பலனை இப்போதுதான் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, தங்களுடன் ஐந்து ஆண்டுகள் பயணித்தவரை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டது தவறு என தி.மு.க உணர்ந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சுனிலுக்கு அத்துப்படி. இன்றைக்கு தி.மு.க-வில் புதிதாக என்ன திட்டம் தீட்டினாலும் அது அ.தி.மு.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறதாம்'' என்றார் கழுகார்.

''ஓஹோ... அப்படியென்றால் சுனிலின் கரம் அ.தி.மு.க-வில் ஓங்குகிறது என்று சொல்லுங்கள்... தி.மு.க முகாம் ரியாக்‌ஷன் என்னவோ?''

"தன்னுடைய நட்பு வட்டாரத்தில் சபரீசன், 'சுனில் வெறும் டேட்டா சேகரித்துத் தருபவர்தான், அவர் வியூக வகுப்பாளர் கிடையாது. அவரைப் பற்றி எனக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் மட்டும்தான் தெரியும். நம்ம ஆட்சி வந்த மாதிரிதான்' எனப் பேசிவருகிறாராம். வழக்கமாக, எந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரு நிறுவனங்கள் கருதுகின்றனவோ, அந்தக் கட்சிக்குத் தாராளமாகச் செய்யும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்படி தமிழகத்தில் தி.மு.க மீது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்பிக்கையோடு இருப்பதால், அவற்றின் மூலம் தேர்தல் செலவைச் சரிக்கட்டலாம் என்று தி.மு.க நினைக்கிறது. இந்த விஷயம் மத்திய அரசுக்குச் சென்றிருப்பதால், `தி.மு.க-வுக்கு உதவியே செய்யக் கூடாது' என்று வட இந்திய நிறுவனங்களுக்கு எச்சரிக்கை சிக்னல் சென்றிருக்கிறதாம்.''

''சரிதான்...''

''கந்த சஷ்டி விவகாரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையிலெடுத்து, 'இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிடாதது ஏன்?' என்று தி.மு.க-வைத் தாக்கத் தொடங்கியிருப்பதும் அவர்களுக்குப் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதி மூலம் 'தி.மு.க-வில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்' என அறிவாலயம் விளக்கமளித்தது.

'இந்த விவகாரத்தில் நம்மைச் சிக்கவைத்து `இந்து விரோதி' என அடையாளப்படுத்தப் பார்க்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை, நலத்திட்ட உதவி வழங்குவதை மட்டும் கையிலெடுப்போம்' என ஸ்டாலினுக்கு சீனியர்கள் அட்வைஸ் அளித்துள்ளனர்.."

''பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் தி.மு.க முகாம் நிலவரமும், தி.மு.க-வை முடக்க, எடப்பாடியின் புதிய வியூகம் உள்ளிட்ட உள்ளரசியல் விவகாரங்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3jxlToy > மிஸ்டர் கழுகு: "தி.மு.க-வை முடக்குவோம்!" - எடப்பாடி புது வியூகம் https://bit.ly/3jxlToy

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு