Published:Updated:

மதுரை: மகன் வீட்டு விழா; ஸ்டாலினை சந்திக்கும் திட்டமா?! - அழகிரியின் சென்னை பயணமும் கேள்விகளும்?

ஸ்டாலின் - அழகிரி

ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், அழகிரி இ-பதிவு செய்து பயணித்தாரா? அப்படி பதிவு செய்திருந்தால் என்ன காரணத்தை குறிப்பிட்டு சென்றார்? என்பதை அதிமுகவினர் சர்ச்சையாக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.

மதுரை: மகன் வீட்டு விழா; ஸ்டாலினை சந்திக்கும் திட்டமா?! - அழகிரியின் சென்னை பயணமும் கேள்விகளும்?

ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், அழகிரி இ-பதிவு செய்து பயணித்தாரா? அப்படி பதிவு செய்திருந்தால் என்ன காரணத்தை குறிப்பிட்டு சென்றார்? என்பதை அதிமுகவினர் சர்ச்சையாக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.

Published:Updated:
ஸ்டாலின் - அழகிரி

மகன் வீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை சென்றுள்ள மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரின் ஆதரவாளர்கள் உள்ள நிலையில், கோவிட் ஊரடங்கில் இ-பதிவு செய்து பயணம் மேற்கொண்டாரா அல்லது முதலமைச்சரின் சகோதரர் என்ற தகுதியில் சென்றாரா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் திமுகவிலிருந்து கடந்த 7 வருடங்களாக நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும், பதவியேற்பு விழாவுக்கு மகனை அனுப்பி வைத்தும் சமாதானக் கொடியை பறக்க விட்டார் மு.க.அழகிரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அழகிரி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அழகிரியுடன் ஸ்டாலின் படத்தை இணைத்து வாழ்த்து விளம்பரங்கள் செய்தனர். ஆனால், அழகிரியையோ அவர் ஆதரவாளர்களையோ மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த வாரம் கொரோனா ஆய்வுக்காக மதுரை வந்திருந்த மு.க.ஸ்டாலின் மு.க.அழகிரியை சந்திப்பார் என்று தகவல் பரவியது. கட்சி சீனியர்களின் ஆலோசனையால் அந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி
மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி

மு.க.அழகிரிக்கு கட்சியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லயென்பது கடந்த தேர்தல்களில் தெரிந்து விட்டது. அவரை சேர்ப்பதால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மாறாக சர்ச்சையும் கட்சியில் குழப்பமும்தான் ஏற்படும் என்று ஸ்டாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதால் அழகிரியை ஏற்றுக்கொள்ள ஸ்டாலின் தயக்கம் காட்டுவதாக கட்சியினர் சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் நேற்று காலை மதுரையிலிருந்து கிளம்பி சென்னை சென்றுள்ளார் மு.க.அழகிரி. அங்கு வசிக்கும் மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை உறவினர்களை அழைத்து நடத்த திட்டமிட்டுள்ளார் அழகிரி.

இன்று நடக்கும் இந்த விழாவில் அழகிரி குடும்பத்தினர், ஸ்டாலின் குடும்பத்தினர், செல்வி மற்றும் தமிழரசு குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்கிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டால் அப்போது அழகிரி அவருடன் சந்தித்து பேசலாம் என்று சொல்லப்படுகிறது. இன்று சந்திப்பு நடைபெற வாய்ப்பு அமையவில்லை என்றால் இன்னும் சில நாட்களில் கோபாலபுரம் வீட்டில் சந்திப்பு நடைபெறும் என்று கட்சியினர் உறுதியாக கூறுகிறார்கள்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

அழகிரியின் சென்னை பயணம் கட்சியினரால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், அழகிரி இ-பதிவு செய்து பயணித்தாரா? அப்படி பதிவு செய்திருந்தால் என்ன காரணத்தை குறிப்பிட்டு சென்றார்? என்பதை அதிமுகவினர் சர்ச்சையாக்க திட்டமிட்டு வருகிறார்களாம். இந்நிலையில், முன்னாள் மத்திய கேபினட் அமைச்சர், முன்னாள் முதலமைச்சரின் மகன், இன்னாள் முதலமைச்சரின் சகோதரர் என்ற அடிபடையில் அவர் எங்கும் பயணம் செய்ய அனுமதி உள்ளது என்கிறார்களாம் அழகிரி ஆதரவாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism