Published:Updated:

`அது, தி.மு.க மீதான பாசம்..!'- மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்

ஸ்டாலின்

''சிறையில் நான் பட்ட சித்ரவதைகள், கொடுமைகளை நினைத்துக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால், நான் மிசாவில் சிறைக்குச் செல்லவில்லை என இவர்கள் பேசுவதுதான் கவலைதருகிறது''என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

`அது, தி.மு.க மீதான பாசம்..!'- மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்

''சிறையில் நான் பட்ட சித்ரவதைகள், கொடுமைகளை நினைத்துக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால், நான் மிசாவில் சிறைக்குச் செல்லவில்லை என இவர்கள் பேசுவதுதான் கவலைதருகிறது''என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஸ்டாலின்

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கட்சியின் ஆக்கப்பணிகள், இடைத்தேர்தல் முடிவுகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. தவிர, பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் விதமாக, நவம்பர் 16-ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திண்ணைப் பிரசாரங்கள் செய்யவும் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில், தருமபுரியில் இன்று நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதில், ''ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை இன்னும் முழுமையடையாமல் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை, கொலை நடந்திருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் விவாதிப்பதில்லை. எப்போதும் தி.மு.க-வையே விமர்சித்துவருகிறார்கள். அது, தி.மு.க மீதான பாசம் என்றுதான் பார்க்கமுடிகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி ஒன்று சொல்லுவார், 'கருணாநிதி வாழ்க என்று சொன்னாலும் கருணாநிதி ஒழிக என்று சொன்னாலும் எல்லோரும் கருணாநிதி என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்' என்று. அதுதான் இப்போதும் நடந்துவருகிறது. எல்லோரும் தி.மு.க-வையும் ஸ்டாலினையுமே விமர்சித்துவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசு மமதையாக இருக்கிறது. மாநில அரசு உதவாக்கரை அரசாக இருக்கிறது. இதுபற்றி யாரும் பேசிவிடக்கூடாது. இதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப வேண்டும். அதனால்தான் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தார்கள். தந்தை பெரியாருக்கு செருப்பு மாலை போட்டார்கள். முரசொலி நிலத்தைப் பஞ்சமி நிலம் எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மிசா சிறையில் இருந்தாரா? இதுதான் இப்போது இருக்கக்கூடிய முக்கியமான கேள்வி. மிசாவில் நான் ஒருவருடம் சிறையில் பட்ட கொடுமைகளை, சித்ரவதைகளை நினைத்துக்கூட கவலைப்படவில்லை. இந்த கேடுகெட்ட ஜென்மங்களால் நான் படும் அவலங்களை நினைத்துதான் கவலைப்படுகிறேன்.

Stalin
Stalin

அதை காலகாலத்துக்கும் என்னால் மறக்கமுடியாது. ஆனால், அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. அண்ணாவைக் கேலி பேசியவர்கள், கிண்டல் செய்தவர்கள் உண்டு. அதையெல்லாம் விட, அவரின் வீட்டுச் சுவரில் அண்ணாவைப் பற்றி தவறாக எழுதிவைத்திருந்தார்கள். அதை நம் கட்சித் தொண்டர்கள் சிலர் அழிக்கப்போனபோது, அண்ணா அவர்களைத் தடுத்து, விடுங்கள்... அவர்களின் யோக்கியதையை மக்கள் பார்த்துக்கொள்ளட்டும்' என்றார்கள்.

''நம் மீதான விமர்சனங்கள் அனைத்துக்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை'' என அண்ணா சொல்வார். அதற்கு உதாரணமாக ஒரு கதை சொல்வார். நமக்கு யானைக்கால் இருக்கிறது என்று யாராவது சொன்னால், அவர்களுக்கு மேடை போட்டு நம் கால் யானைக்கால் இல்லை என்று காட்டிக்கொண்டிருக்க முடியாது. அப்படித்தான் நானும் என் மீதான பல விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல், என் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தியாகம், போராட்டம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்னை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினைக் கேள்வி கேட்க உங்களுக்கு எந்த அருகதையும் யோக்கியதையும், தகுதியும் கிடையாது என்பதை இங்கே நான் பதிவுசெய்கிறேன். அதுவும் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி சிறை சென்றிருக்கிறேன் '' என மிகக் காட்டமாகப் பேசினார்.