Published:Updated:

`ட்ரெண்டிங்' கனிமொழி... `டேட்டா' பிரசாந்த் கிஷோர் மீது கடுப்பில் ஸ்டாலின்?!

ஸ்டாலின் - கனிமொழி
ஸ்டாலின் - கனிமொழி

வடையைச் சுவைத்த கழுகார், "ஓர் அமைச்சரின் நைட் ரவுண்ட்ஸ் பற்றிச் சொல்கிறேன். பெயர் கேட்காதீர்" என்று 'டீ'யை உறிஞ்சியபடி தொடர்ந்தார்.

"சென்னை போரூர் அருகே உள்ள ஒரு விடுதிக்கு அந்த அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் மாதத்தில் ஒருநாள் வருகிறார்களாம். இவர்கள் வருவதற்கு முன்னதாக, துணை நடிகைகள் சிலரும் வந்து அறையெடுத்துத் தங்குகிறார்கள். தாகசாந்தி முடிந்தவுடன், அந்த நடிகைகள் தங்கியிருக்கும் 'ரூம் சாவி'கள் குலுக்கப்படுமாம். யார், எந்தச் சாவியைக் கண்ணை மூடிக்கொண்டு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்த ரூமில் 'இளைப்பாறுவது' வழக்கம் என்கிறார்கள்.

துணை நடிகைகளை அழைத்துவரும் பொறுப்பை கடவுளின் பெயர்கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவரே செய்கிறாராம். இந்த விவகாரம் அரசல் புரசலாக அமைச்சரின் குடும்பத்துக்குள் கசிய, அவரை 'பெஞ்ச்' மீது நிற்கவைக்காத குறையாகக் குடைந்துவிட்டனராம் குடும்பத்தினர்."

"தி.மு.க செய்திகள் ஏதேனும்?"

"சமீபத்தில் திருச்சி மாவட்டம், மணப்பாறையி லுள்ள நடிகர் விமல் வீட்டுக்குச் சென்ற தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, விமலிடம் பத்து நிமிடங்கள் தனியாகப் பேசியிருக்கிறார். திருச்சி மாவட்ட அரசியலுக்குள் அன்பில் மகேஷின் கை ஓங்கிய பிறகு, நேருவின் செல்வாக்கு சறுக்க ஆரம்பித்துவிட்டது. அதை ஈடுகட்டவே, சிறு நட்சத்திர 'சந்திப்பு' என்கிறார்கள்."

"பலே..."

கனிமொழி
கனிமொழி

"பிரசாந்த் கிஷோர் மீது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுப்பில் இருப்பதாகத் தகவல். 'தூத்துக்குடி தந்தை, மகன் கொலை வழக்கை சர்வதேச அளவில் கொண்டுசென்றதில் தொடங்கி, 'இந்தி தெரியாது போடா' டி-ஷர்ட் அடித்தது வரை எல்லாமே தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி உருவாக்கிய ட்ரெண்ட்தான். இவ்வளவு கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும், வெறும் டேட்டாவை உருட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

'ஒன்றிணைவோம் வா' திட்டம் காலாவதி ஆகிவிட்டது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் இப்போதே எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. உருப்படியாக ஏதாவது யோசனை தந்திருக்கிறீர்களா?' என்று ஐபேக் தரப்பிடம் ஸ்டாலின் கடுகடுத்துவிட்டாராம்."

- டி.டி.வி.தினகரன் 'மூவ்', சசிகலா விடுதலை விவகாரம், பி.ஜே.பி-யின் ஸ்பெஷல் சர்வே மற்றும் கழுகார் கான்ஃபிடன்ட் நோட் உள்ளிட்ட அனைத்தையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/32wQw6O> மிஸ்டர் கழுகு: டி.டி.வி அளித்த டீ பார்ட்டி! - ரகசியமாய் சந்தித்த 10 அமைச்சர்கள்... https://bit.ly/32wQw6O

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு