Published:Updated:

`கண்காணிப்பு' ஏற்பாட்டுக்கு ஸ்டாலின் கொந்தளிப்பு... உதயநிதி கடும் அப்செட்!

உதயநிதி
உதயநிதி

தொகுதிக்கு ஒரு மேற்பார்வையாளரை நியமித்து, அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

செய்திகளுக்குத் தாவிய கழுகார், "தி.மு.க இளைஞரணிச் செயலாளரான உதயநிதி, 'இளைஞரணி மற்றும் ஐ.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் சரியாகப் பணியாற்றுவதில்லை' என்கிற கவலையில் இருக்கிறாராம். இதற்காக, தொகுதிக்கு ஒரு மேற்பார்வையாளரை நியமித்து, அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக வீடியோ கால் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதைக் கேட்டதும், 'என்னிடம் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை, கட்சிப் பதவியில் இருப்பவர்களைக் கண்காணிக்க வெளியாட்களை நியமிப்பீர்களா?' என்று ஸ்டாலின் கொந்தளித்துவிட்டாராம். இதனால், உதயநிதி கடும் அப்செட் என்கிறார்கள்!"

"ம்ம்... பா.ஜ.க-வில் ஏதோ மூவ் நடப்பதாகக் கூறுகிறார்களே..?"

"மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை பா.ஜ.க-வுக்கு இழுக்க, பேச்சுவார்த்தை நடக்கிறது. `முத்தரையர் வாக்கு களைக் குறிவைத்து இந்த ஸ்கெட்ச்' என்கிறார்கள்.

இதேபோல, மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானுக்கும் தூண்டில் போடுகிறார்கள். தகவல் தெரிந்து கு.ப.கிருஷ்ணனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமாதானம் பேசியதாகத் தகவல்."

"அ.தி.மு.க அவைத்தலைவர் பதவிக்கு ரேஸ் நடக்கிறதாமே?"

"ஆமாம். வயது முதிர்வு காரணமாக அவைத்தலைவர் மதுசூதனனால் முன்புபோல சுறுசுறுப்பாகச் செயல்பட முடியவில்லை. அதனால், அவரைப் பதவியிலிருந்து விடுவித்து விட்டு, சீனியர்கள் யாரையாவது நியமிக்கலாம் என்று கட்சித் தலைமை கருதுகிறது. பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்களாம்."

> "அன்பில் மகேஷிடம் கடுகடுத்த கட்சித் தலைமை..."

> வடமாவட்ட உடன்பிறப்புகளின் புலம்பல்...

> தூத்துக்குடி அ.தி.மு.க-வில் புகைச்சல்...

> கோயில் கோயிலாக வலம் வரும் ராஜேந்திர பாலாஜி...

> ராகுல் கலகம்....

- இவை தொடர்புடைய தகவல்களுடன் கழுகார் அப்டேட்டுகளை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2YxTvJK > சாட்டை எடுக்கும் திரிபாதி! - கலக்கத்தில் தென் மாவட்ட காக்கிகள்... https://bit.ly/2YxTvJK

தினகரன் தலைமறைவு மர்மம்!?

சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்களே இருக் கின்றன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஹேர் ஸ்டைலையே மாற்றி உடன்பிறப்புகளை அசத்துகிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எந்நேரமும் வீடியோ காலிலேயே தரிசனம் தருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பிரசாரத்தையே துவங்கிவிட்டார்.

ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வுமான தினகரன் ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருப்பதைப்போல் எங்கும் தலையைக் காட்டாமல் அறிக்கை மட்டும் விடுகிறார். கட்சியின் தொண்டர்களாலேயே அவரைச் சந்திக்க முடியவில்லை. இதற்கு முன்னர் அ.தி.மு.க-வின் தலைவி ஜெயலலிதாவை, ‘பால்கனி அரசியல்’ நடத்தியதாக விமர்சிப்பார்கள். தினகரனோ ‘பண்ணை வீடு’ அரசியல் நடத்துகிறார்.

தினகரன்
தினகரன்

சில நாள்களுக்கு முன்னர் தினகரனின் தொகுதியான ஆர்.கே.நகரில், சசிகலாவின் 66-வது பிறந்தநாள் விழாவில்கூட தினகரனின் தலை தென்படவில்லை. 150 நாள்களாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகியுள்ள தினகரன், திரைமறைவில் இருந்தபடி அரசியல் நடத்துவது பல்வேறு வதந்திகளைக் கிளப்பியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்த புலம்பல்களும் உள்ளரசியல் தகவல்களும் முழுமையாக இங்கே... க்ளிக் செய்க... https://bit.ly/3ljfQ7E > தினகரன் தலைமறைவு மர்மம்!? - 150 நாள்களாக எங்கே போனார்... என்ன செய்கிறார் https://bit.ly/3ljfQ7E

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு