Published:Updated:

மதுரை: `அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தது ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன்தான்!’ - ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

`முதலமைச்சரை மக்கள் நேரிடையாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார். அது எங்களுக்கும் தெரியும். ஆனால், யார் முதலமைச்சராக வர வேண்டும் என நினைத்துத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்’ - ஸ்டாலின்.

``எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தது ஓ.பி.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும்தான்... நாங்கள் அல்ல..." என்று மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் செக்கானூரணியில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தி.மு.க கிராம சபை - ஸ்டாலின்
தி.மு.க கிராம சபை - ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசும்போது, ``இது கிராமசபைக் கூட்டமா, கிராமசபை மாநாடா என்று ஆச்சர்யப்படும் வகையில் மக்கள் திரண்டு வந்திருக்கிறீர்கள். தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெண்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

`முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி’ என்று இனி குறிப்பிட மாட்டேன். வெறும் முதலமைச்சர் பழனிசாமிதான். ஏனென்றால் எடப்பாடி மக்கள், தங்கள் ஊர் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரை மக்கள் நேரிடையாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார். அது எங்களுக்கும் தெரியும், ஆனால், யார் முதலமைச்சராக வர வேண்டும் என நினைத்துத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படித்தான் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக வந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வர அவர் யார் காலிலெல்லாம் விழுந்தார், தவழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

புதுச்சேரி: கூட்டணி விவகாரம்; கடுகடுத்த ஸ்டாலின்! - ஜெகத்ரட்சகன் `ஜகா’ வாங்கிய பின்னணி

ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தோம் என்று எங்கள்மீது பழி போடுகிறார். அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தது 11 எம்.எல்.ஏ-க்களுடன் ஓ.பன்னீர்செல்வமும், 21 எம்.எல்.ஏ-க்களுடன் டி.டி.வி.தினகரனும்தான். நாங்கள் நினைத்திருந்தால் ஆட்சியை ஒரு நொடியில் கலைத்திருப்போம்; நினைக்கவில்லை. கலைஞர் வழியில் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வர நினைத்தோம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

`மதுரையில் எய்ம்ஸ் வரவில்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்றார் ஆர்.பி.உதயகுமார். மோடி வந்து அடிக்கல் நாட்டியும் இதுவரை ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கவில்லை. இனி ஆர்.பி.உதயகுமார் ராஜினாமா செய்யத் தேவையில்லை. நான்கு மாதங்களில்ல் மக்கள் அவரைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். இதுபோல், அ.தி.மு.க கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதாவுக்காகக் கோயில் கட்டும் ஆர்.பி.உதயகுமார், அவர் மரணத்திலுள்ள மரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றாரா? ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து நாங்கள் சொல்வோம்" என்று பேசினார் மு.க.ஸ்டாலின்.

அடுத்த கட்டுரைக்கு