Published:Updated:

``அந்த ஊர்க்காரர்களுக்கு இயற்கை இடர்பாடுகள் குறித்து தெரியாது”- மணிகண்டன் எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

விழாவில் பேசிய மணிகண்டன்
விழாவில் பேசிய மணிகண்டன் ( உ.பாண்டி )

மணிகண்டனிடம் இருந்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியினைப் பறித்து வருவாய்த் துறை அமைச்சரான ஆர்.வி. உதயகுமாரிடம் கொடுத்தார். இதனால் உதயகுமார் மீதும் மணிகண்டனுக்குக் கோபம் ஏற்பட்டது.

"கடலோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமே பேரிடர் மேலாண்மைத் துறையினை ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் மதுரை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பேரிடர் பற்றித் தெரியாது'' என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்துப் பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

அரசு விழாவில் மணிகண்டன்
அரசு விழாவில் மணிகண்டன்
உ.பாண்டி

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதல் முறையிலேயே அமைச்சராக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இதனால் கட்சியின் ஆரம்ப கால முன்னோடியும், நீண்ட அரசியல் அனுபவமும் கொண்ட முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி-யுமான அன்வர்ராஜா, மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் என எல்லோரிடமும் பகைமையை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மணிகண்டனின் அமைச்சர் பதவியைக் காலி செய்து விட வேண்டும் எனக் கருதிய சிலர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் வாசித்தபடி இருந்ததாக அப்போதே பேச்சுகள் இருந்தன. இந்த நிலையில்தான் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் மட்டுமே அப்போது மணிகண்டனின் அமைச்சர் பதவி தப்பியதாக பரவலாக பேசப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தினால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த எடப்பாடி பழனிசாமியும் மணிகண்டனின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் மாவட்டத்தில் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்குப் போனார் மணிகண்டன் என்று செய்தி வாசித்தனர் பலர். இவரது நடவடிக்கையினால் வெறுப்படைந்த பலர் தினகரனின் பக்கம் சென்றனர். அதன் பின்னரும் மணிகண்டன் தனது செயல்களை மாற்றிக் கொள்ளவில்லை. மாவட்டத்தில் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த மணிகண்டன் பரமக்குடி இடைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜை ஓரங்கட்டும் வகையில் இளைய வயதுடைய சதன் பிரபாகருக்கு சீட் கிடைக்க காய்களை நகர்த்தியதாகவும் செய்திகள் கசிந்தன.

தாலிக்குத் தங்கம் வழங்கிய மணிகண்டன்
தாலிக்குத் தங்கம் வழங்கிய மணிகண்டன்
உ.பாண்டி

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாத இறுதியில் மணிகண்டனிடம் இருந்த அரசு கேபிள் டி.வி.நிறுவனத் தலைவர் பதவியைப் பறித்து கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். கேபிள் டி.வி நிறுவனத் தலைவர் பதவியை இழந்த மணிகண்டன் அதை மீண்டும் பெற முயன்று வந்தார். இதற்கான முயற்சியின் போது அவர் செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டி ஒன்றினால் தன்னிடம் இருந்த அமைச்சர் பதவியையும் பறி கொடுத்தார்.

மதுரை, திருச்சி பகுதிகளில் இருப்பவர்களுக்கு இயற்கை இடற்பாடுகள் குறித்து தெரியாது. அவர்கள் அது குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடலோர மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும்.
மணிகண்டன்

"அரசு கேபிள் டி.வி.நிறுவனத் தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன், தன்னிடம் உள்ள 2 லட்சம் கேபிள் இணைப்புகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்'' எனவும் "இதன் மூலம் அவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்'' என்றும் மணிகண்டன் கொடுத்த பேட்டியினால் வெகுண்டெழுந்த எடப்பாடி, மணிகண்டனிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியினைப் பறித்து வருவாய்த் துறை அமைச்சரான ஆர்.வி.உதயகுமாரிடம் கொடுத்தார். இதனால் உதயகுமார் மீதும் மணிகண்டனுக்குக் கோபம் ஏற்பட்டது. இதனிடையே இழந்த அமைச்சர் பதவியைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மணிகண்டனுக்கு எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் மணிகண்டன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

மிஸ்டர் கழுகு: மணிகண்டன் முதல் விக்கெட்... இன்னும் மூவருக்கு பிராக்கெட்!

இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பின் நேற்று ராமேஸ்வரத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் கொடுக்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன், "அம்மாவின் ஆட்சியில் தாலிக்குத் தங்கம் கொடுக்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது தவிர கடலில் மூழ்கி பலியான 6 மீனவர்களின் குடும்பங்களுக்கு எனது சொந்த நிதியாக தலா 50 ஆயிரம் வழங்கியுள்ளேன். அரசு நிதியாக தலா 5 லட்சம் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். ஆனால், சிலரின் தவறான வழிநடத்தல் காரணமாக பேரிடரில் உயிரிழந்த கன்னியாகுமரி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது போல் தலா 20 லட்சம் கேட்டு வழக்கு போட்டுள்ளனர். அப்படி கொடுக்க முடியாது. ஏழை மீனவர்கள் ஏமாந்துவிட வேண்டாம். அது மட்டுமல்ல பேரிடர் மேலாண்மைத் துறை, கடலோர மாவட்ட அமைச்சரிடமோ அல்லது மீன்வளத்துறை அமைச்சரிடமோ இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் மத்திய மாவட்டங்களான மதுரை, திருச்சிப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு இயற்கை இடர்பாடுகள் குறித்து தெரியாது. அவர்கள் அது குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடலோர மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். அந்த மாதிரியானவர்களிடம் அந்தத் துறையினைக் கொடுத்தால் உடனடியாக மீனவர்களின் கஷ்டம், துயரம் அறிந்து 5 லட்சத்திற்குப் பதிலாக 20 லட்சம் கொடுக்கலாம். அந்த நிலையை உருவாக்கலாம்.

எனவே அரசு விதிமுறைப்படி 5 லட்சம்தான் கொடுக்க முடியும். இது மட்டுமல்லாது பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அவற்றை எல்லாம் தகுதியான அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பெற்றுத் தருவேன்'' என்றார்.

விழாவில் பேசிய மணிகண்டன்
விழாவில் பேசிய மணிகண்டன்
உ.பாண்டி
மணிகண்டன் விக்கெட்: எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்களின் தொடக்கப்புள்ளியா?

"தனக்கு 2 கண்ணும் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்பது போல தன்னிடமிருந்து அமைச்சர் பதவி போனாலும், தனது எதிரியான உதயகுமாரிடம் இருக்கும் ஒரு துறையாவது பறிபோக வேண்டும் என நினைக்கும் வகையில் அமைந்துள்ளது மணிகண்டனின் இந்தப் பேச்சு" என்று தொண்டர்கள் கிசுகிசுக்க.. மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது இவர் பேச்சு.

அடுத்த கட்டுரைக்கு