Published:Updated:

மகாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் - அமித் ஷாவைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்

டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு

மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

மகாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் - அமித் ஷாவைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்

மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

Published:Updated:
டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவசேனா அரசு கவிழ்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கழித்துத்தான் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக-விலிருந்து தலா எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தும்போது பிரிந்துவரும் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அமைச்சர் பதவியைக் காட்டித்தான் அழைத்துவந்தனர் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால், இரண்டாவது முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது தங்களுக்குப் பதவி கிடைக்கும் என்று எம்.எல்.ஏ-க்கள் காத்திருக்கின்றனர்.

மகாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் - அமித் ஷாவைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்

ஆனால், தற்போது அமைச்சரவை பதவியேற்று ஆறு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவுக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால், இப்போது அமைச்சரானால்தான் தங்களது தொகுதிக்கு நலத்திட்டப் பணிகளைச் செய்ய முடியும் என்று ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கருதுகின்றனர். இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம் மட்டுமல்லாது, மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவியிலிருந்து விலக பிரதமரிடம் விருப்பம் தெரிவித்திருந்தது குறித்தும் அமித் ஷாவிடம் ஆலோசித்தனர். மகாராஷ்டிரா அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மத்திய அமைச்சர் ராவ் சாஹேப் தன்வே, பாஜக தேசியச் செயலாளர் பங்கஜா முண்டே ஆகியோரும் டெல்லி சென்றிருக்கின்றனர்.

பாஜக-விலும் அமைச்சர் பதவிக்காகப் பலரும் காத்திருக்கின்றனர். ஆளுநரின் விருப்பத்தின் அடிப்படையில் பிரதமர் முடிவு எடுப்பார் என்றும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டுறவுத்துறை தொடர்பாகவும், ஆளுநர் பதவி விலக விரும்பியது, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தினோம் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 27-ம் தேதி பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இதனால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மாநகராட்சிக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. அமைச்சரவை விரிவாக்கம் செய்வதன் மூலம் மும்பை மாநகராட்சித் தேர்தலில் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று இரு கட்சிகளும் கருதுகின்றன.