Published:Updated:

அதானிக்காக அழுத்தம் கொடுத்தாரா மோடி..? - இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

ஃபெர்டினாண்டோ தனது கருத்தைத் திரும்பப் பெற்றிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையில் ராஜாங்கரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

அதானிக்காக அழுத்தம் கொடுத்தாரா மோடி..? - இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

ஃபெர்டினாண்டோ தனது கருத்தைத் திரும்பப் பெற்றிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையில் ராஜாங்கரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Published:Updated:
இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

இலங்கை மின் உற்பத்தியில், அதானி குழுமம் கால்பதிக்கப்போவதாகத் தகவல்கள் வந்தபோதே பல சர்ச்சைகள் வெடித்தன. தற்போது, `இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகத்தான் மின் உற்பத்தி ஒப்பந்தங்கள் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்டன’ என்று இலங்கை மின்வாரியத் தலைவர் ஃபெர்டினாண்டோ கூறியதால் மேலும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த நிலையில், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றதோடு, தனது பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார் ஃபெர்டினாண்டோ. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

அதானிக்காக அழுத்தம் கொடுத்தாரா மோடி..? - இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

கடந்த அக்டோபர் மாத இறுதியில் இலங்கைக்குச் சென்ற அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவையும் நேரில் சந்தித்து மின் உற்பத்தித் திட்டங்கள் தொடர்பாகப் பேசினார். இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு இடங்களில், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி கோரியது அதானி நிறுவனம். அப்போது, ``மோடி நமக்கு நிதியுதவி செய்கிறார் என்பதற்காக, இலங்கையின் வளங்களை அவரின் நண்பர் அதானிக்கு விற்க முடியாது’’ என்று ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கொந்தளித்தன இலங்கையின் எதிர்க்கட்சிகள். எதிர்ப்புகளை மீறி, மார்ச் 2022-ல், மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களில் `அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்’ நிறுவனம் கையெழுத்திட்டது.

ஜூன் 9 முதல் 13 வரை... என்ன நடந்தது?

ஜூன் 9: இலங்கை நாடாளுமன்றத்தில், மின்சாரச் சட்டம் 1989-ல் `போட்டி ஏலம் இல்லாமல் மின் ஒப்பந்தங்களை ஒரு நிறுவனத்துக்கு அளிக்க முடியும்’ என்ற ஒரு முக்கியத் திருத்தம் செய்வதற்கான மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா 120 எம்.பி-க்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ``எந்தவிதச் சிக்கலுமின்றி அதானி குழுமத்தின் மின் ஒப்பந்தங்களுக்கு இடமளிக்கவே இந்தப் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’’ என்று குற்றம்சாட்டியது.

ஜூன் 10: நாடாளுமன்றப் பொது நிறுவனங்களுக்கான குழுவின் கூட்டத்தில், ``எவ்வாறு மன்னார் மின் உற்பத்தித் திட்டம் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது?’’ என்று கேள்வியெழுப்பினார் எம்.பி பாட்டலி சம்பிக்க ரணவக்க. இதற்கு பதிலளித்த இலங்கையின் மின்வாரியத் தலைவர் ஃபெர்டினாண்டோ, ``கடந்த நவம்பர் 24-ம் தேதி என்று நினைக்கிறேன். அதிபர் என்னை அழைத்து, இந்தத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தியப் பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒதுக்குமாறு தனக்கு அழுத்தம் தருவதாகவும் அதிபர் என்னிடம் கூறினார். அதிபர் எனக்கு உத்தரவு பிறப்பித்ததால், இதைச் செய்துகொள்ளுமாறு நிதி அமைச்சகத்துக்கு நான் கடிதம் எழுதினேன்’’ என்று கூறினார்.

ஜூன் 11: `எந்தவொரு நிறுவனத்துக்கோ, தனிநபருக்கோ இந்தத் திட்டத்தை ஒதுக்குவதற்கான அங்கீகாரத்தை நான் வழங்கவில்லை’ என்று பதறியடித்துக்கொண்டு குற்றச்சாட்டை மறுத்தார் அதிபர் கோத்தபய. அன்றிரவே, `மன அழுத்தத்தில் மாற்றிச் சொல்லிவிட்டேன்’ என்று தனது கருத்தை மொத்தமாகத் திரும்பப் பெற்றார் ஃபெர்டினாண்டோ.

ஜூன் 13: அடுத்த இரண்டே நாள்களில் தனது மின்வாரியத் தலைவர் பதவியை ஃபெர்டினாண்டோ ராஜினாமா செய்ய, இந்த விவகாரம் அடுத்த கட்டத்துக்குச் சென்றது.

அதானிக்காக அழுத்தம் கொடுத்தாரா மோடி..? - இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

அழுத்தம் காரணமாகத்தான் பதவி விலகினாரா?

இலங்கையின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர், ``நாட்டின் பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி, வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்துச் சொல்வதற்கெல்லாம் அதிபர் கோத்தபய தலையாட்டுவது, இலங்கையை மேலும் படுகுழியில் தள்ளிவிடும். அதுமட்டுமல்லாமல், அதானி குழுமம் இலங்கையில் மின் உற்பத்தி செய்தால், நம் நாட்டின் மின் உற்பத்தி முறை சீர்குலைந்துவிடும். இது எதிர்காலத்துக்கு நல்லதல்ல’’ என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், `இலங்கை போன்ற அண்டை நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் எங்களை ஏமாற்றமடையச் செய்திருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்னைகளை ஏற்கெனவே இலங்கை அரசாங்கம் பேசித் தீர்த்துவிட்டது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில், இலங்கையின் எதிர்க்கட்சிகள் கோத்தபய அரசுக்கு ஒருபுறம் அழுத்தம் கொடுத்துவர, இந்தியாவிலும் ‘ஒரு தனியார் குழுமத்தை முன்வைத்து’ வெளிநாட்டுக்கு அழுத்தம் கொடுத்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மோடி அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பிவருகின்றன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `பா.ஜ.க-வின் குளறுபடிகள் தற்போது கடல் தாண்டி, இலங்கைக்குள்ளும் நுழைந்துவிட்டது’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

அதானிக்காக அழுத்தம் கொடுத்தாரா மோடி..? - இலங்கை மின் ஒப்பந்தச் சர்ச்சையில் என்ன நடந்தது?

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள், ``ஃபெர்டினாண்டோ தனது கருத்தைத் திரும்பப் பெற்றிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையில் ராஜாங்கரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரு நாட்டின் தலைவர்களும் பேசிக்கொண்டதை, அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியிருப்பது இலங்கை மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனால் இந்தியா மட்டுமல்ல, உதவ முன்வரும் மற்ற நாடுகளுக்கும் இலங்கை மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்த விவகாரம் இந்திய அரசுக்கும் பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதால், ராஜாங்கரீதியிலான பாதிப்புகளைத் தவிர்க்கவே, அழுத்தம் கொடுத்து ஃபெர்டினாண்டோவைப் பதவி விலக வைத்திருக்கிறார்கள்’’ என்றார்கள்.

பெர்டினாண்டோ
பெர்டினாண்டோ

இலங்கையின் முன்னாள் மின்வாரியத் தலைவரின் கருத்தை இலங்கை அரசாங்கம் பொய் என்று மறுத்திருந்தாலும், நெருப்பில்லாமல் புகைந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உலகறிந்த ரகசியம். ஆனால் இதில், இரு நாடுகளின் பெருந்தலைகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்னை அப்படியே அணைந்துவிடும் என்பதுதான் யதார்த்தம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism