Published:Updated:

தடுப்பூசி பற்றாக்குறை... பழிவாங்கும் நடவடிக்கை... தடுமாறும் மோடி அரசு!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

‘இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்காமல் 5.8 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?’

தடுப்பூசி பற்றாக்குறை... பழிவாங்கும் நடவடிக்கை... தடுமாறும் மோடி அரசு!

‘இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்காமல் 5.8 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?’

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி
கொரோனா இரண்டாவது அலையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகும் இந்தச் சூழலிலும்கூட எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவில்லை. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் ஏற்பாடு செய்த காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் நிவாஸ் பிவியை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்துள்ளனர். இன்னொரு பக்கம் மத்திய அரசு வெளிநாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.
ஸ்ரீநிவாஸ், கனகராஜ், நாராயணன் திருப்பதி
ஸ்ரீநிவாஸ், கனகராஜ், நாராயணன் திருப்பதி

மே 14-ம் தேதி தேசிய காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், ‘மருத்துவப் பொருள்கள் எங்கிருந்து கிடைக்கின்றன, அதை வாங்குவதற்குப் பணம் எங்கிருந்து வருகிறது, ரெம்டெசிவிர் மருந்துகள் எப்படிக் கிடைக்கின்றன?’ என்று விசாரணை செய்திருக்கின்றனர். இன்னொரு பக்கம், ‘மோடி ஜி எங்கள் குழந்தைகளின் தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள்?’ என்று டெல்லியில் போஸ்டர் ஒட்டியதற்காக 10-க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது ஏன்?’ என்கிற வாசகத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படமாக பதிவிட்டு, ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

‘இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்காமல் 5.8 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ‘மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், இறக்குமதி செய்வதிலும் காட்டிய பெரும் சுணக்கத்தின் விளைவு இந்த கொரோனா மரணங்கள்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். சி.பி.எம் கட்சியும் ‘தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து தவறான தகவல்களையே வெளியிட்டுவருகிறது’ என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை... பழிவாங்கும் நடவடிக்கை... தடுமாறும் மோடி அரசு!

சி.பி.எம் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் நம்மிடம், “உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்று விளம்பரம் செய்கிறது மத்திய அரசு. அதில் துளியும் உண்மை இல்லை. சீனாவில் இதுவரை 38 கோடி பேருக்கும், அமெரிக்காவில் 28 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம் நாட்டில் 18 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில்தான் அதிகமாகப் போடப்பட்டிருக்கிறது.

கோவிஷீல்டு தயாரிப்பு முறைகளை நாம் வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோம். கோவாக்‌ஸின், ஐ.சி.எம்.ஆருக்குக் கீழ் உள்ள ‘வைராலஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான், பாரத் பயோடெக் என்கிற தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஏன் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், செங்கல்பட்டு ஹெ.எல்.எல் போன்ற நிறுவனங் களுக்குக் கொடுக்கவில்லை? சர்வதேச நாடுகளிடம் தடுப்பூசி கண்டுபிடிப்பு உரிமையைக் கொடுக்க வேண்டும் என இந்தியா கேட்கிறது. ஆனால், சொந்த நாட்டு மக்களிடம், தடுப்பூசிக்கு ஐந்து சதவிகிதமும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவிகிதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது.

அதேபோல, ஏராளமான தகவல்களை மத்திய அரசு மறைத்துவருகிறது. டெல்லியில் ஒரு நாளைக்கு 500-600 மரணங்களை மறைத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின்றன. கங்கைக் கரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 900 பிணங்களைப் புதைத்திருக்கிறார்கள். மழையில் மண் கரைந்து பிணங்கள் வெளியே தெரிந்திருக்கின்றன. ஆக்ஸிஜன் படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதிகள், இறந்தவர்களை தகனம் செய்தல் என எந்தவொரு விஷயத்திலும் மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை. அரசும் உதவுவதில்லை, உதவி செய்பவர்களுக்கும் நெருக்கடி கொடுக்கிறார்கள்... எங்கேயிருந்து பணம் கிடைக்கிறது, பொருள் கிடைக்கிறது என காங்கிரஸ் தலைவரைக் கேட்டவர்கள், ஏன் இது போன்ற உதவிகளைச் செய்த பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவில்லை?’’ என்றார் கோபமாக.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, “தடுப்பூசி தயாரிப்பு என்பது கடலை மிட்டாய் தயாரிப்பது போன்றதல்ல. அதற்கென சில கால அவகாசங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட பரிசோதனைக் கூடங்களில்தான் தயாரிக்க முடியும். அதேபோல அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. உலகிலேயே இந்தியாவில்தான் விரைவாகத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை வைத்துக்கொண்டு மலிவான அரசியலைச் செய்கிறார்கள். கோவிஷீல்டு தயாரிக்கும் ‘சீரம்’ ஒரு சர்வதேச நிறுவனம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அவர்களின் கடமையாக இருக்கும். தவிர, நம் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கும், நம்மை நம்பி இருக்கிற நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism