Published:Updated:

``சிம்லா காவல்துறை தலைமையகத்திலும் வெடித்திருக்கக்கூடும்" -ஹிமாச்சல் முதல்வரை எச்சரித்த காலிஸ்தான்

டிரோன் தாக்குதல்

பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் வீசப்பட்ட குண்டு, சிம்லா காவல்துறை தலைமையகத்திலும் நடந்திருக்கலாம் என்று ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரை காலிஸ்தானி அமைப்பான Sikhs for Justice (SFJ) எச்சரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டு வீசப்பட்டது. அதனால், காவல் நிலையத்தின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. எனினும் இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மொஹாலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.ஏ.எஸ் நகர், செக்டர் 77-ல் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் இரவு 7:45 மணியளவில் சிறிய குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. உயர்திகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திவருகின்றனர். தடயவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தது.

ஜெய்ராம் தாக்கூர்
ஜெய்ராம் தாக்கூர்

டிரோன்கள் வழியாக அதிக அளவில் வெடிபொருள்கள், ஆயுதங்கள், போதைப்பொருள்களின் வருகை தற்போது பஞ்சாப்பில் அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பு மீண்டும் பாதுகாப்பு அச்சத்தைப் பஞ்சாப்பில் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளை நிற ஸ்விஃப்ட் டிசையர் காரில், உளவுத்துறை அலுவலக கட்டடத்திலிருந்து சுமார் 80 மீட்டர் தொலைவிலிருந்து ஆர்.பி.ஜி-யை ஏவினார்கள் என்று தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங்
Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங்
ட்விட்டர்

இந்த நிலையில், காலிஸ்தான் அமைப்பான Sikhs for Justice (SFJ)-யின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங், "இந்தக் கையெறி குண்டுத் தாக்குதல் சிம்லா காவல்துறை தலைமையகத்திலும் நடந்திருக்கக்கூடும்" என்று ஆடியோ செய்தியில் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரை எச்சரித்திருப்பது தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism