Published:Updated:

மதுரை: மூக்கையா தேவர் நினைவு நாள் - பலத்தைக் காட்டிய ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்!

மூக்கையா தேவருக்கு அஞ்சலி

மூக்கையா தேவரின் 43-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உசிலம்பட்டியிலுள்ள நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

மதுரை: மூக்கையா தேவர் நினைவு நாள் - பலத்தைக் காட்டிய ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்!

மூக்கையா தேவரின் 43-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உசிலம்பட்டியிலுள்ள நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

Published:Updated:
மூக்கையா தேவருக்கு அஞ்சலி

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராகவும், 6 முறை எம்.எல்.ஏ-வாகவும், எம்.பி-யாகவும் அரசியல் பணியாற்றிய மூக்கையா தேவரின் 43-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உசிலம்பட்டியிலுள்ள நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தும் மக்கள்
அஞ்சலி செலுத்தும் மக்கள்

எடப்பாடி அணியிலிருந்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் சமீபத்தில் ஓ.பி.எஸ் அணிக்கு மாறிய நிலையில், இந்த அஞ்சலி நிகழ்ச்சி அதிக கவனத்தை பெற்றது. தங்கள் பலத்தை காட்ட இரண்டு அணிகளும் போட்டி போட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓ.பி.எஸ் அணியில் தேனி எம்.பி. ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், மாவட்டச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான், முருகேசன், அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரும் கூட்டத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடத்தில் கல்லூரி மாணவிகள்
நினைவிடத்தில் கல்லூரி மாணவிகள்

எடப்பாடி அணியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே. ஜக்கையன், பெரியபுள்ளான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பெரும் கூட்டத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "மூக்கையா தேவரின் 100-வது நினைவு தினம்" என்று பேசத்தொடங்க அருகிலிருந்த ராஜன் செல்லப்பாவும், செல்லூர் ராஜூவும் "100-வது பிறந்த தினம், 43-வது நினைவு தினம்" என்று அவருக்கு எடுத்துச்சொல்ல, அதன் பின்பு சிறிது நேரம் யோசித்த பின் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "உசிலம்பட்டியில் தேவர் சிலைக்கு அருகே மூக்கையா தேவர் சிலை அமைக்க அரசாணை வெளியிட்டவர் எடப்பாடியார்.

மூக்கையா தேவருக்கு அஞ்சலி
மூக்கையா தேவருக்கு அஞ்சலி

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு ஒன்றரை கோடி செலவில் மணிமண்டபத்தை உருவாக்கித் தந்தவர் எடப்பாடியார். அதேபோல் மூக்கையா தேவரின் எண்ணத்தை நினைவாக்கும் வகையில் 58-ம் கால்வாய் திட்டத்திற்கு மராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று முறை சோதனை ஓட்டத்தை நடத்தி தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அயராது பாடுபடுவோம்" என்றார்.

``மூக்கையா தேவருக்கு சிலை ஓ.பி.எஸ்-ஸின் சொந்தச் செலவில் வைக்கப்பட்டது. 58-ம் கால்வாய் திட்டம் 20 வருடங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சியில் இறுதிப்பணிகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இது தெரியாமல் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகிறார்" என்கிறார்கள் உசிலம்பட்டி மக்கள்.