Published:Updated:

கரூர்: `செந்தில் பாலாஜிக்கு தேர்தல் பயம்!' - கொந்தளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது...
எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது... ( நா.ராஜமுருகன் )

`கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும்' என்று சவால்விட்டுவருகிறார். மக்கள்தான் வெற்றியை வாக்குகள் மூலம் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவர் (செந்தில்பாலாஜி) தெரிவிக்க முடியாது.’

``பேனர் வைத்ததில் ஏற்பட்ட சிறிய பிரச்னையை பெரிதாக்கியதோடு, ஒரு பெரியவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால், `அவரை அ.தி.மு.க-வினர்தான் தாக்கினர்' என்று பிரச்னையைப் பெரிதாக்கிய செந்தில் பாலாஜி, பிணத்தைவைத்து அரசியல் செய்தார். தி.மு.க-வின் தலைமை எப்படியோ, அதேபோலதான் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியும் பொய்யை மட்டுமே சொல்லிவருகிறார்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசமாக பேசினார்.

அ.தி.மு.க கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்
நா.ராஜமுருகன்
கரூர்: `கலெக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்!' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, `கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும். அ.தி.மு.க-வினர் சவாலுக்கு தயாரா?' என்று பேட்டி கொடுத்திருந்தார். அதோடு, கடந்த ஞாயிறன்று, `கரூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 25,000 தி.மு.க வாக்காளர்களை நீக்க அ.தி.மு.க-வினர் முயல்கின்றனர். இதற்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உடந்தை' என்று கூறி, பரபரப்பை பற்றவைத்தார். இந்தநிலையில், அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்திருக்கிறார். அ.தி.மு.க-வின் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், கரூர் அருகேயுள்ள பசுபதிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில்,

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது...
எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது...
நா.ராஜமுருகன்

``கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்று தி.மு.க-வினர் தவித்துவருகிறார்கள். அதற்கு, பொதுமக்கள் இடம் கொடுத்துவிடக் கூடாது. இங்கு ஒருத்தர் (செந்தில் பாலாஜி), `கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும்' என்று சவால்விட்டுவருகிறார். மக்கள்தான் அந்த 50,000 வாக்குகள் வித்தியாச வெற்றியை வாக்குகள் மூலம் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவர் (செந்தில்பாலாஜி) தெரிவிக்க முடியாது. ஆகவே, 10,000 முறை அவர், வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தாலும், வெற்றியையும் தோல்வியையும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழகத்திலேயே கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் 100 சதவிகிதம் அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றது. கரூர் மாவட்ட மக்களிடம் அ.தி.மு.க-வின் திட்டங்களைச் சொல்வோம். உண்மையைச் சொல்வோம். ஆகவே, அ.தி.மு.க கட்சிக்குத்தான் கரூர் மாவட்டம் என்பதை உணர்த்த, 100 சதவிகித வெற்றியை அ.தி.மு.க-வுக்கு கொடுத்ததுதான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி. ஆகவே, செந்தில் பாலாஜி வெறும் வாய்ச்சவடால் பேச வேண்டாம். 100 சதவிகிதம் இது அம்மாவின் ஆட்சி. கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 25,000 வாக்குகளை, கரூர் தொகுதிக்குக் கொண்டு வந்துவிட்டதாக, பத்திரிகையில் பேட்டி கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அப்படிச் செய்ய முடியுமா... அப்படியானால் அதிகாரிகள் என்ன தூங்கிக்கொண்டிருக்கிறார்களா... நாளை கரூர் தொகுதியில் தி.மு.க-வுக்குத் தோல்வி ஏற்பட்டால், இதைக் காரணம் சொல்வதற்கா?.

அ.தி.மு.க கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்
நா.ராஜமுருகன்

எங்களுக்கு எந்த வாக்குகளையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கட்சிதான் ஜெயிக்கும். தேர்தல் பயம் வந்த காரணத்தால் மட்டுமே செந்தில் பாலாஜி ஏதோ உளறிக்கொண்டிருக்கிறார். பேனர் வைத்ததில் ஏற்பட்ட பிரச்னையைப் பெரிதாக்கியதோடு, ஒரு பெரியவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால், அவரை அ.தி.மு.க-வினர்தான் தாக்கினர் என்று கூறி பிணத்தைவைத்து அரசியல் செய்தார் செந்தில் பாலாஜி. தி.மு.க-வின் தலைமை எப்படியோ, அதேபோலத்தான் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியும் பொய்யை மட்டுமே சொல்லிவருகிறார்" என்றார் அதிரடியாக!.

அடுத்த கட்டுரைக்கு