Published:Updated:

`நடிகர் சோனு சூட்-ஐ மும்பை மேயர் பதவிக்கு நிறுத்த வேண்டும்' - மும்பை காங்கிரஸுக்கு கோரிக்கை!

சோனு சூட்
சோனு சூட்

மும்பைக்கு அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு நடிகர் சோனு சூட் போன்ற பிரபலங்களை நிறுத்த வேண்டும் என்று மும்பை காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. `இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்தார். இது தொடர்பாக சிவசேனாவுக்கும், நானா பட்டோலேவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டது. தற்போது அடுத்தகட்டமாக காங்கிரஸ் தலைவர்கள் மாநகராட்சித் தேர்தலைச் சந்திக்க இப்போதே தயாராகிவிட்டனர். இந்தத் தேர்தலுக்காக கட்சித் தலைமை, உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டிருந்தது.

மகாராஷ்டிரா: வெள்ளத்தால் பாதித்த மக்கள்; ஒரு லட்சம் லிட்டர் பால் பாக்கெட் அனுப்பும் சோனு சூட்!
கணேஷ் குமார்
கணேஷ் குமார்

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை அனுப்பியிருந்தனர். மும்பை காங்கிரஸ் செயலாளராக இருக்கும் கணேஷ் குமார் யாதவ், கட்சியின் தேர்தல் கமிட்டிக்கு அனுப்பியிருக்கும் பரிந்துரை சற்று விநோதமாக இருக்கிறது. அந்த அறிக்கை எப்படியோ வெளியில் கசிந்துவிட்டது. அதில் மும்பை மாநகராட்சித் தேர்தலை எதிர்கொள்ள மேயர் பதவிக்கு நடிகர் சோனு சூட், ரிதேஷ் தேஷ்முக் அல்லது மிலிந்த் சோமனை நிறுத்தலாம் என்று தெரிவித்திருக்கிறார். இளைஞர்களைக் கவர வேண்டுமானால் இவர்களை மேயர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கட்சியின் தேர்தல் கமிட்டிக்கு அனுப்பிய அறிக்கை எப்படி வெளியானது என்று தெரியவில்லை எனக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து தமிழரான கணேஷ் குமாரிடம் கேட்டதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தேர்தல் கமிட்டியில் மாநிலத் தலைவர் நானா பட்டோலே, முன்னாள் முதல்வர் அசோக் சவான், பிருத்வி ராஜ்சவான், பாய் ஜக்தாப் போன்றோரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்பு நடிகை ஊர்மிளாவை காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியது. ஆனால் அதில் ஊர்மிளா தோல்வியைத் தழுவினார். இப்போது அவர் சிவசேனாவுக்குச் சென்றுவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு