Published:Updated:

`தேசிய கீதம் பாடும்போது பாதியில் எழுந்துச் சென்றார்'- மம்தாவுக்கு மும்பை நீதிமன்றம் சம்மன்!

மம்தா பானர்ஜி

தேசிய கீதத்தை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது.

`தேசிய கீதம் பாடும்போது பாதியில் எழுந்துச் சென்றார்'- மம்தாவுக்கு மும்பை நீதிமன்றம் சம்மன்!

தேசிய கீதத்தை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது.

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மாதம் மும்பை வந்திருந்திருந்தார். அப்போது, யஷ்வந்த் ராவ் சவான் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக்குவது குறித்தும் பேசினார். யஷ்வந்த்ராவ் சவான் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி மும்பை பா.ஜ.க செயலாளர் விவேகானந்த குப்தா மும்பை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். குப்தா தனது மனுவில், `யஷ்வந்த்ராவ் சவான் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜி எழுந்திருக்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தார். அதோடு தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென எழுந்த மம்தா சில வரிகள் பாடிவிட்டு பாதியில் சென்றுவிட்டார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். தேசிய கீதத்தை அவமதித்தற்காக மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஐ.மொஹாசி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மனுதாரர் தரப்பில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரமும், யூடியூப் லிங்க்கும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட நபர் தவறு செய்திருப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று கூறிய நீதிபதி மம்தா பானர்ஜிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், `சம்பவம் நடந்த நிகழ்ச்சி அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அல்லது அரசு நிகழ்ச்சியும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்க எந்த வித அனுமதியும் பெறவேண்டிய அவசியம் இல்லை' என்றும் நீதிபதி தெரிவித்தார். சம்மனுக்கு மார்ச் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மம்தா பானர்ஜி சமீபத்தில் மேற்குவங்க ஆளுநரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism