Published:Updated:

``சிவசேனாவுக்கு ஏதாவது நடந்தால்... மும்பை பற்றி எரியும்” - மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு

நிதின் ராவத்

``சிவசேனாவுக்கு ஏதாவது நடந்தால் மும்பை பற்றி எரியும்” என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதின் ராவத் எச்சரித்திருக்கிறார்.

``சிவசேனாவுக்கு ஏதாவது நடந்தால்... மும்பை பற்றி எரியும்” - மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு

``சிவசேனாவுக்கு ஏதாவது நடந்தால் மும்பை பற்றி எரியும்” என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதின் ராவத் எச்சரித்திருக்கிறார்.

Published:Updated:
நிதின் ராவத்

சிவசேனா எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுவிட்டனர். இதனால் மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் அலுவலங்கள் சிவசேனா தொண்டர்களால் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மும்பை குர்லாவில் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ மங்கேஷ் குடால்கரின் அலுவலகத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையை சிவசேனா தொண்டர்கள் அடித்து சேதப்படுத்தினர். இது போன்று நகரின் பல இடங்களில் நடக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் சிவசேனா கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதோடு பாஜக தலைவர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. திடீரென சிவசேனா தொண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்திவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

சிவசேனா
சிவசேனா

மும்பை முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டிருக்கிறனர். சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நிலையில் சிவசேனா அமைச்சர் நிதின் ராவத் அளித்த பேட்டியில், ``சிவசேனாவுக்கு ஏதாவது நடந்தால் மும்பை பற்றி எரியும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், ``மும்பையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சிவசேனா தொண்டர்களின் வன்முறையைப் பயன்படுத்தி, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சரின் எச்சரிக்கையைத் தொடர்ந்தே மும்பை போலீஸார் நகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே சிவசேனா, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து பிற கூட்டங்களில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!