Published:Updated:

உ.பி: இஸ்லாமியரை 'ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடக் கட்டாயப்படுத்திய கும்பல் - ஒருவர் கைது

கைது

உதய்பூர் கன்ஹையா லாலைக் கொலை செய்த குற்றவாளி என அழைத்து 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிடக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

உ.பி: இஸ்லாமியரை 'ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடக் கட்டாயப்படுத்திய கும்பல் - ஒருவர் கைது

உதய்பூர் கன்ஹையா லாலைக் கொலை செய்த குற்றவாளி என அழைத்து 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிடக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

Published:Updated:
கைது

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவிலுள்ள தர்மபுரா கால்வாய் பகுதிக்கு, முபீன் அஹமது என்ற இஸ்லாமியர் மாடுகளுக்குப் புல் எடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது ஒரு குழுவினர் 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜே' கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அவர்களைக் கடந்து போன முபீன் அஹமதை தேசவிரோதி எனவும், உதய்பூர் கன்ஹையா லாலைக் கொலை செய்த குற்றவாளி எனவும் அழைத்து 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிடக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்தக் கும்பல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

காவல்துறை
காவல்துறை

இதற்கிடையே, முபீன் தன்னைத் தாக்கியவர்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் எதிர்க்கவில்லை. அவர்கள்மீது புகாரளிக்கவுமில்லை. ஆனால், அவர்கள் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அறிந்த பின்பே, மதுரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரா நகர் உயரதிகாரி அபிஷேக் யாதவ், "முபீன் அஹம்துவின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகச் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான ஜிதேந்திரா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மதுரா மாவட்டத்தின் அமைதியைச் சீர்குலைக்க எவரையும் காவல்துறை அனுமதிக்காது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!