Published:Updated:

`அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பதவி நீக்க வேண்டும்!' - விருதுநகரில் தொடரும் போராட்டங்கள்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ராஜேந்திர பாலாஜியின் சொந்த மாவட்டமான விருதுநகரின் பல்வேறு பகுதிகளில், அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

`அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகளைக் கூறிவருகிறார். பிரிவினையை உண்டாக்குகிறார். அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்' என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
ஆர்.எம்.முத்துராஜ்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிரடியாகப் பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்துகளைக் கூறிவருகிறார். இந்த நிலையில், `அவர் முஸ்லிம்களைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார். பி.ஜே.பி கட்சி நிர்வாகிபோல பேசுகிறார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுபோன்று, முஸ்லிம் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ராஜேந்திர பாலாஜியின் சொந்த மாவட்டமான விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். சமீபத்தில், த.மு.மு.க-வினர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொண்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
ஆர்.எம்.முத்துராஜ்

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாநில நிர்வாகிகள் அப்துல் ரகுமான், சுலைமான் தலைமையில் ராஜேந்திர பாலாஜியின் தொகுதியான சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பிரிக்க நினைக்கும் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த இவ்வமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஆர்.எம்.முத்துராஜ்

சில நாள்களுக்கு முன்பு, ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து மனு கொடுத்த தேசிய லீக் கட்சியினர், ராஜேந்திர பாலாஜியையும் முஸ்லிம்களையும் பிரிக்க முடியாது என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு