Published:Updated:

`ஜனநாயக இந்தியாவை முடக்குவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!' - கொதிக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மாநிலங்களவையில் விவசாய மசோதாவை நிறைவேற்றுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பின்போது, அவைத் தலைவரிடம் மோசமான வகையில் நடந்துகொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் தெரிக் ஓ பிரையன் மற்றும் டோலா சென், காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் ராஜீவ் சதாவ், ரிபுன் போரா மற்றும் நசீர் ஹுசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி-க்கள் இளமாறன் கரீம் மற்றும் கே.கே. ராகேஷ், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ஆகியோர் மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் தெரிக் ஓ பிரையன்
மாநிலங்களவை உறுப்பினர் தெரிக் ஓ பிரையன்
`ஏன் இந்தக் குழப்பம்.. நீங்களே மக்களவைக்கு வருவதில்லை..?’ - மோடி உரையும் டெரிக் ஓ பிரையன் கேள்வியும்

எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சிலர், அவை விதிமுறைகள் அடங்கிய நகல்களைக் கிழித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவம் நடந்தபோது பலமுறை மாநிலங்களவை நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் தெரிக் ஓ பிரையன் கூறுகையில்,

நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் அவர்கள் மீறினார்கள். நாட்டு மக்கள் இதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக ராஜ்யசபா தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தினார்கள். ராஜ்யசபா தொலைக்காட்சியைத் தணிக்கை செய்தார்கள்.
ட்விட்டரில் தெரிக் ஓ பிரையன்

இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்துக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

தென்னை மரத்தில் அமர்ந்தபடி செய்தியாளர் சந்திப்பு; அசத்திய அமைச்சர்! - ஏன் தெரியுமா?
இது குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``முதலில் மெளனம் சாதிப்பதன் மூலமும், பின்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதன் மூலமும் விவசாய கறுப்புச் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளைக் கண்மூடித்தனமாகத் திசைதிருப்புவதன் மூலமும் `ஜனநாயக இந்தியாவை முடக்குவது' என்பது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. ‘எல்லாம் அறிந்த’ மத்திய அரசின் `முடிவற்ற ஆணவம்' முழு நாட்டுக்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரைக்கு