Published:Updated:

அதிமுக: `தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்...’ - டைமிங்கில் ரைமிங் பாடலுடன் களத்தில் இறங்கிய தொண்டர்!

அதிமுக தொண்டர்கள்

கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் போட்டி போட்டு முழக்கங்களை எழுப்பினர்.

அதிமுக: `தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்...’ - டைமிங்கில் ரைமிங் பாடலுடன் களத்தில் இறங்கிய தொண்டர்!

கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் போட்டி போட்டு முழக்கங்களை எழுப்பினர்.

Published:Updated:
அதிமுக தொண்டர்கள்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23 -ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டம் குறித்து மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றுவருகிறது. எம்ஜிஆர் மாளிகையின் முதல் தளத்தில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் , ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் போட்டி போட்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள்
ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள்

இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் சிலர் கீழே வந்து இரு தரப்பையும் அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு காத்திருந்த அ.தி.மு.க தொண்டர் ஒருவர் தனது கையடக்க ஒலிபெருக்கியில் `நாளை நமதே’ திரைப்படத்தின் 'நாளை நமதே... ' என்ற திரைப்படப்பாடலைச் சத்தமாக ஒலிக்கச் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒலிபெருக்கியில் பாடல் இசைக்கும் தொண்டர்
ஒலிபெருக்கியில் பாடல் இசைக்கும் தொண்டர்

அதில் வரும் வரிகளான.......

"தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று

நேர் வழி சென்றால்...

நாளை நமதே...

அந்த நாள் நினைவுகள்... எந்த நாளும் மாறாது"

என்று ஒலித்துக்கொண்டிருந்தது... போட்டி முழக்கங்களால் குழம்பிப்போயிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் அந்த பாடலால் உற்சாகம் அடைந்தனர். மேலும் சர்ச்சைகளுக்கும் சற்று இடைவெளிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism