“இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கை, சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான கேடு விளைவிக்கக்கூடியது என்பதால் எவ்வித சமரசமும் இல்லாமல் அதை நாங்கள் எதிர்க்கிறோம். சூழலியல் பிரச்னைகளில் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இன்றைக்கு இ.ஐ.ஏ 2020 எதிர்ப்பு நிலைப்பாட்டை தி.மு.க எடுக்கிறது என்றால், அது வெறும் அரசியலுக்காக மட்டுமே. ‘கார்ப்பரேட்களுக்கு கார்பெட் விரிக்கும் இந்தச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் கூறுகிறார். தி.மு.க-வின் இந்த எதிர்ப்பு வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், தி.மு.க-வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவும் ஆ.ராசாவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களாக இருந்த காலகட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்களது தவறான கொள்கை முடிவுகளால், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளங்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல்துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, 2003-ம் ஆண்டு, மார்ச் 13-ம் தேதி ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு’ குறித்த அரசு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, சுற்றுச்சூழலை மிக மோசமாக பாதிக்கக்கூடிய ‘சிவப்புப் பிரிவில்’ சேர்க்கப்பட்டிருந்த 64 தொழில்களில் 17 தொழில்களுக்கு டி.ஆர்.பாலு விலக்கு அளித்தார். அது ஒரு மோசமான நடவடிக்கை.

‘சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய பெரும் தொழில் திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படும்போதும் நவீனப் படுத்தப்படும்போதும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்’ என்ற விதி சுற்றுச்சூழல் சட்டங்களில் இருந்தது. 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தில், அந்த விதி திருத்தப்பட்டது. அதன்படி, `விரிவாக்கம் செய்யப்படுகிற, நவீனப்படுத்தப்படுகிற தொழிற்சாலை, மத்திய அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய தேவையில்லை. அதற்கு பதிலாக, தங்களுக்குத் தாங்களே சான்றளித்துக்கொள்ளலாம்’ என்று கொண்டுவரப்பட்டது. இதனால், சுற்றுச்சூழல் சட்டங்கள் வீரியம் இழந்தன. அதன் பிறகு, 2006-2008 காலகட்டத்தில் மட்டும் 2016 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்த வரைவு அறிக்கைக்கு தமிழகத்தில் பரவலாகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆகவே உடனடியாக இதில் கவனம் செலுத்தி, தங்கள் நிலைப்பாட்டை அ.தி.மு.க அரசு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஜூலை 29-ம் தேதி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ‘இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது’ என்று மட்டும் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த முடிவையும் நடவடிக்கையையும் எடுக்காமல் கள்ளமௌனம் சாதிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஓராண்டுக்கு முன்பே, மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சுழிய வரைவு மீதான கருத்துகளைத் தெரிவிக்கும்படி அனைத்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்களுக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் அனுப்பிவைத்தது. அதில் ஓராண்டாக இன்னும் எவ்வித முடிவையும் அ.தி.மு.க அரசு எடுக்கவில்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆளும் அரசுகளும் ஆண்ட அரசுகளும் மக்களுக்கு துரோகமே செய்திருக்கின்றன!’’

வெண்ணிலா தாயுமானவன்,

சுற்றுச்சூழல் பாசறை மாநிலச் செயலாளர், நாம் தமிழர் கட்சி.