Published:Updated:

ஆர்.என்.ரவி பிரியாவிடை நிகழ்வு; புறக்கணித்த நாகாலாந்து ஊடகங்கள்!

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

முதலமைச்சரின் குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய் மாலை 6 மணிக்கு விழா நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த செவ்வாய் கிழமை நாகாலாந்து தலைநகரான கொஹிமாவில் நடைபெற்ற ஆளுநர் ஆர்என்.ரவியின் பிரியாவிடை நிகழ்வை அனைத்து நாகாலாந்து ஊடகங்களும் புறக்கணித்திருகின்றன. தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி 2019-ம் ஆண்டு நாகாலாந்தின் 19-வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதலே அவர் பத்திரிகையாளர்களை அலட்சியப்படுத்தியதே பத்திரிக்கையாளர்களின் நிராகரிப்புக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய் மாலை 6 மணிக்கு விழா நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டதும் கொஹிமா பத்திரிகை கிளப் தலைவர் ஆலிஸ் யோஷோ அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி: சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்! -நாகாலாந்து ஆளுநர் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி

ஆலிஸ் யோஷோ எழுதிய கடிதத்தில், "கொஹிமா பிரஸ் கிளப் உங்களை திரு. ஆர். என்.ரவியின் விழாவைப் புறக்கணிக்கவோ அல்லது ஒளிபரப்பவோ கட்டாயப்படுத்தவில்லை. முடிவு உங்களுடையது ஆனால், இந்த விஷயத்தில் கேபிசி உடன் ஒற்றுமையாக இருந்தால் உங்களை நாங்கள் பாராட்டுகிறோம். ஏனெனில் ஆர்.என்.ரவியின் பத்திரிகையாளர்கள் மீதான அலட்சியம் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது" என சொல்லப்பட்டிருந்தது.

"ஆர்.என்.ரவி பத்திரிகையாளர்களை மட்டும் அல்ல, கொஹிமா ப்ரெஸ் கிளப் மற்றும் நாகாலாந்து பத்திரிகையாளர் சங்கத்தையும் புறக்கணித்தார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் இருந்து உள்ளூர் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி எங்கள் சங்கத்தில் இருக்கும் தேசிய ஊடக பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு நேர்காணல் கூட கொடுக்கப்பட்டதில்லை" என கேபிசி தலைவர் ஆலிஸ் யோஷோ கூறினார்.

ஆளுநரின் பிரியாவிடையை ஒட்டி மூத்த பத்திரிகையாளர் கல்லூல் டே பதிவிட்ட ட்வீட்டில், ' இதற்கு முன்பு எந்த நாகாலாந்து ஆளுநரும் இவரைப் போன்று விசித்திரமாக நடந்துகொண்டு வெளியேறியது இல்லை. அவரின் கதையில் திமிரான நடத்தையை நாகாலாந்து ஊடவியலாளர்கள் எப்போதும் நினைவில் கொண்டிருப்பர்" என பதிவிட்டுள்ளார். மேலும் கேபிசியின் நடவடிக்கை குறித்து, " ஆர்என்.ரவி விவகாரத்தில் கேபிசி எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன். பாரம்பரிய நாகாலாந்து ஊடகங்களிடம் அவர் நடந்து கொண்ட விதத்திற்கு இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். அவரின் பதவிக் காலத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக்கூட அவர் நடத்தவில்லை! எண்ணற்ற முறை பல முக்கிய ஊடகவியலாளர்கள் கேட்டபோதும்கூட நிராகரித்திருக்கிறார்" எனக் கூறினார்.

ஆர்.என்.ரவி பிரியாவிடை நிகழ்வு; புறக்கணித்த நாகாலாந்து ஊடகங்கள்!

பிரஸ் ட்ரஸ்ட் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் நாராயண பகதூர், "நாங்கள் மாநில அரசுக்கு எதிரானவர்கள் அல்ல; மாநில அரசு அழைக்காத போதிலும் நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளோம். ஆனால் கேபிசியின் முடிவுக்குத் தற்போது ஆதரவு அளிக்கிறேன். மேலும் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பத்திரிகையாளர்களை அலட்சியப்படுத்தியது கண்டிக்கதக்கது" என கூறியுள்ளார். தற்போது நாகாலாந்து ஆளுநராக அசாம் ஆளுநர் ஜக்தீஷ் முகி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு