Published:Updated:

விகடன் செய்தியாளர்கள் மீதான வழக்கு: குமரி மாவட்ட எஸ்.பி-யிடம் மனு அளித்த பிரஸ் கிளப்!

எஸ்.பி-யிடம் மனு அளித்த பிரஸ் கிளப் நிர்வாகிகள்
எஸ்.பி-யிடம் மனு அளித்த பிரஸ் கிளப் நிர்வாகிகள்

விகடன் செய்தியாளர், புகைப்படக் கலைஞர் மீது வழக்கு தொடரப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இலங்கைத் தமிழர்களின் கருத்தை அறிவதற்காக செய்தி சேகரிக்கச் சென்ற குமரி மாவட்ட விகடன் செய்தியாளர் சிந்து, புகைப்படக் கலைஞர் ராம்குமார் ஆகியோர் மீது 188, 447, 505(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

செய்திகள்
செய்திகள்

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் இருக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவல்துறை உடனடியாக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பாக இன்று குமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்தை சந்தித்து மனு அளித்தார்கள். பிரஸ் கிளப் நிர்வாகிகள் அளித்த மனுவில், `செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட விகடன் நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது. 

விகடன் நிருபர்கள் மீது வழக்கு...  கருத்தைக் கேட்டால் கழுத்தை நெரிக்கும் தமிழக அரசு!

பிரஸ் கிளப் நிர்வாகிகள் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்ட குமரி மாவட்ட எஸ்.பி-யான ஸ்ரீநாத், `செய்தியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்துள்ளார். நாகர்கோவில் பிரஸ் கிளப் நிர்வாகிகளின் இந்த முயற்சியைச் செய்தியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு